ஜாகிர் நாயக்கிற்கு எதிராக, தேசத்துரோக குற்றச்சாட்டு - நீதிமன்றத்தில் வழக்கு
தேசத்துரோக குற்றச்சாட்டுகளுடன் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக உ.பி. கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவரது போதனைகளை ஒளிபரப்பு செய்த பீஸ் டிவியை வங்காளதேசம் தடை செய்தது.
இந்நிலையில் இந்தியாவில் தேசத்துரோக குற்றச்சாட்டுகளுடன் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக உ.பி. கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லகனோவில் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இணைய தளங்களில் உள்ள ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் அனைத்தும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது என்று மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.
Post a Comment