Header Ads



"கறுப்பு அபாயா" சிந்­த­னைக்­கு...!

-எம்.எம்.எம்.ரிஸா - விடிவெள்ளி-

இஸ்­லாத்தில் பெண்களின் உடைகள் தொடர்­பாக பல்­வே­று­பட்ட ஆக்­கங்கள், உரைகள், கலந்­து­ரை­யா­டல்கள், விவா­தங்கள் இன்று வரை தொட­ர்ந்த வண்­ணமே உள்­ளன. இவ்­வாக்கம் இஸ்­லாத்தில் பெண்கள் உடை விட­யத்தில் சட்­டங்கள் ஆதா­ரங்கள், மற்றும் கருத்து முரண்­பா­டுகள் பற்­றி­ய­தல்ல. அவைகள் அனைத்­திலும் போதிய தெளிவை நாம் அனை­வரும் கருத்து முரண்­க­ளு­ட­னா­யினும் பெற்றே வைத்­துள்ளோம்.

அத்­தெ­ளி­வு­களின் சார­மாக
1. முகம், முன் கைகள் உட்­பட உடலின் அனைத்து பாகங்­களும் மறைக்­கப்­பட வேண்டும்  2. முகம், முன் கைகள் தவிர்த்து ஏனைய உடற்­பா­கங்கள் மறைக்­கப்­பட வேண்டும்

என்ற இரு கருத்­து­க­ளே­யாகும். இவற்றில் இரண்டாம் கருத்தே மிகப் பல­மா­னதும் அதி­க­மான அல்­குர்ஆன் சுன்னா ஆதா­ரங்­களைக் கொண்­ட­து­மாகும். இவ்­வி­ரண்டு கருத்­துக்­களும் இன்று முஸ்லிம் சமூ­கத்தில் நடை­மு­றை­யிலும் உள்­ளன. இது தவிர்ந்த ஏனைய உடைக் கலா­சா­ரங்கள் இருப்பின் அவை இஸ்­லா­மிய உடைக் கலா­சா­ரத்­துக்கு அப்­பாற்­பட்­டவை. இத்­த­கைய சுருக்­க­மான விளக்­கத்­தோடு, இஸ்­லா­மிய பெண்­களின் உடை பின்­வரும் நிபந்­த­னை­களைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்­பதை அல்­குர்ஆன் சுன்­னாவின் நிழலில் நாம் தொகுத்துக் கூற முடியும்:

1.     முகம், முன் கை தவிர்ந்த ஏனைய பாகங்கள் மறைக்­கப்­படல் 2.     உடை கன­மான துணியில் அமைந்­தி­ருத்தல் 3.     உடல் பாகங்கள் தெரி­யு­ம­ளவு இறுக்­க­மா­ன­தாக இல்­லா­தி­ருத்தல் 4.     பெண்­களின் ஆடை ஆண்­களின் ஆடைக்கு ஒப்­பா­கா­தி­ருத்தல் 5.     காபிர்­களின் ஆடை­க­ளுக்கு ஒப்­பா­கா­தி­ருத்தல்     6.     எளி­மை­யா­ன­தாக இருத்தல் 7.    ஆடையில் மணம் பூசிக்­கொள்­ளா­தி­ருத்தல் போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம். எனவே, மேற்­கு­றிப்­பிட்ட நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்­கின்ற உடையே பெண்­களின் இஸ்­லா­மிய உடை­யாகும்.  தற்­போது நடை­மு­றையில் உள்ள குறிப்­பாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணி­கின்ற ஆடை­களில் முஸ்லிம் சமூகம் இஸ்­லா­மிய உடை என பல வகை­யிலும் அங்­கீ­க­ரித்­தி­ருக்கும் உடை­களில் ‘அபாயா’ முதன்­மை­யா­னது. அது தவிர்ந்து இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணாத உடை­க­ளையும் முஸ்லிம் பெண்கள் அணி­வதை காண ­மு­டி­கி­றது. அவற்றுள் சாரி (Saree) சல்வார் (Shalwar kameez) பாவாடை தாவணி (Skirt & Blouse) போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம். 

இன்று முஸ்லிம் பெண்­களின் உடை இரண்டு வகை விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளது. 

முத­லா­வது: முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்­ளேயே எழு­கின்ற விமர்­ச­னங்கள்: பிற கலா­சார தாக்­கங்­களால் முஸ்லிம் பெண்கள் அணியும் இஸ்­லா­மிய வரை­யறை தாண்­டிய உடைகள் பற்­றி­யதும் இஸ்­லா­மிய வரை­யறைகளைப் பேணி அணி­யப்­படும் ‘அபாயா’ வில் ஏற்­பட்­டு­வரும் மாற்­றங்கள் பற்­றி­ய­து­மான விமர்­ச­னங்கள் ஒரு வகை.  இன்று "அபாயா", அறி­முக காலத்­தி­லி­ருந்து பல மாற்­றங்­களைக் கண்டு வந்­துள்­ள­மையை காண முடி­கின்­றது. அதன் துணி­வகை, வேலைப்­பாடு மற்றும் அணியும் முறை போன்­ற­வற்றின் மாற்­றங்­க­ளோடு சமூ­கத்தின் விமர்­ச­னங்­க­ளுக்கும் அது உட்­பட்­டுள்­ளது. 

அவற்றுள் முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ‘அபாயா’ பற்­றிய விமர்­ச­னங்­க­ளா­வன:
1.     ‘அபாயா’ உடை தற்­போது முன்பை விட உடற் கட்­ட­மைப்பு வெளிப்­படும் வகையில் இறுக்­க­மா­ன­தாக வடி­வ­மைக்­கப்­ப­டு­கின்­றமை. 2.     ‘அபாயா’ உடைக்கு பயன்­ப­டுத்­தப்­படும் துணி மிக மெல்­லி­ய­தாக காணப்­ப­டு­கின்­றமை. 3.     கவர்ச்­சி­க­ர­மான வேலைப்­பா­டுகள் கொண்­டி­ருக்­கின்­றமை. போன்­றவை பிர­தா­ன­மா­னவை.

அத்­தோடு முஸ்லிம் பெண்­களின் உடை எதிர்­நோக்கும் இரண்­டா­வது விமர்­சனம் முஸ்­லி­மல்­லா­த­வர்­களால் நீண்ட கால­மாக எழுப்­பப்பட்­டு­வரும் ‘பெண் சுதந்­தி­ரத்­தோடு தொடர்­பு­பட்ட விமர்­சனம். அதுவும் இந்த கறுப்பு ‘அபாயா’ பற்­றி­யதே.  எனவே ஓர் இஸ்­லா­மிய உடை அமைப்­பான "அபாயா" இரு­வேறு பின்­ன­ணியில் இரு­வேறு சமூ­கத்­தி­னரால் விமர்­ச­னங்­க­ளுக்கும் விவா­தங்­க­ளுக்கும் உட்­பட்­டி­ருக்கும் சூழலில் இவ்­வி­மர்­ச­னங்­களை முழு­மை­யாக தட்டிக் கழிக்­காமல் அவற்றில் நியா­யங்கள் உள்­ளதா என்­பதை ஆராய வேண்­டிய தேவை முஸ்­லிம்­க­ளா­கிய எமக்கு இருக்­கி­றது.  ஏனெனில் விமர்­ச­னங்கள் தவ­றான புரி­தல்­களைக் கொண்­டி­ருப்­பது போலவே நியா­ய­மான சுட்­டிக்­காட்­டல்­க­ளையும் சுமந்­தி­ருக்கும். எனவே இவ்­வி­ட­யத்தைக் கருத்தில் கொண்டு விமர்­ச­னங்­களை நோக்­கு­வதே சிறந்­தது. அந்த வகையில் "அபாயா" என்ற, சமூ­கத்தில் பர­வ­லாக பிர­யோ­கத்தில் இருக்கும் உடை­ய­மைப்­பா­னது மேற்­கு­றிப்­பிட்ட இஸ்­லா­மிய நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்­யு­மாயின் அது நிச்­ச­ய­மாக இஸ்­லா­மிய உடையே. மாறாக, இன்று சமூ­கத்தில் அறி­மு­கத்தில் இருக்கும் "கறுப்பு அபாயா" என்ற உடை மாத்­தி­ரம்தான் இஸ்­லா­மிய உடை என்ற புரிதல் இருக்­கு­மாயின் அதுவும் தவ­றான­தாகும்.

மற்­றொரு கோணத்தில் இஸ்­லா­மிய உடை­யல்­லாத மேற்­கத்­திய கலா­சார உடை­களின் தாக்­கத்தால் அபாயா என்­கிற இஸ்­லா­மிய உடை ஷரீஅத் கோடிட்டுக் காட்டும் நிபந்­த­னை­களை மீறும் எல்­லைக்குச் சென்­றி­ருக்­கி­றது என்­பதே உண்மை. அத்­தோடு ஆடை விட­யத்தில் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் பார­பட்­ச­மாக நடந்­து­கொள்­வதும் இங்கே குறிப்­பிட்டுக் காட்ட வேண்­டிய ஒரு விட­ய­மாகும்.  ஏனெனில் முஸ்லிம் பெண்­களின் ஆடை விட­யத்தில் நாம் காட்டும் கடும் போக்கு முஸ்லிம் ஆண்­களின் ஆடை விட­யத்தில் காட்­டு­வ­தில்லை. அந்­நிய ஆண்­களின் பார்­வை­யி­லி­ருந்து முஸ்லிம் பெண்­களை காப்­பதில் காட்டும் அக்­கறை அந்­நிய கலா­சார உடை­ய­ணியும் அல்­லது அரை­குறை ஆடை அணியும் முஸ்லிம்/ முஸ்லிம் அல்­லாத பெண்­க­ளோடு முஸ்லிம் ஆண்கள் பேணு­த­லோடு நடந்­து­கொள்­வதில் காட்­டப்­ப­டு­வ­தில்லை. சர்­வ­ சா­தா­ர­ண­மாக சக­ஜ­மாகப் பழகும் போக்கே இன்று அலு­வ­ல­கங்­க­ளிலும் பொது இடங்­க­ளிலும் காணக்­கி­டைக்­கி­றது. 'பல்­லின சமூகம் வாழும் நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழ்­வதால் இவ்­வா­றான சக­ஜீ­வனம் இன்­றி­ய­மை­யா­தது' என்ற நியா­யத்தை இல­கு­வாக ஆண்கள் முன்­வைத்­து­வி­டு­கிறோம். இது இஸ்­லா­மிய பார்­வைக்கு அப்பால் ஆணா­திக்­கத்தின் ஒரு வெளிப்­பா­டா­கவே எண்ணத் தோன்­று­கி­றது.

ஆதலால், இப்­புள்­ளியில் முஸ்லிம் சமூகம் பெண்­களின் இஸ்­லா­மிய உடை, அதன் நடை­முறை, அவர்­க­ளுக்­கான நியாயம் என்­பன பற்றி சற்று கரி­சனை செலுத்தும் கடப்­பாட்டைக் கொண்­டுள்­ளது. மேற்­கு­றிப்­பிட்ட ஆடைக் கலா­சார சிக்­கல்கள் தீர்க்­கப்­பட வேண்­டு­மாயின் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் பெண்­க­ளுக்­கான ‘’அபாயா’’ வுடன், ஷரீ­அத்தின் நிபந்­த­னை­க­ளுக்­குட்­பட்ட பல்­வேறு ஆடை­களை பல்­வேறு நிறங்­களில் பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைத்து அறி­மு­கப்­டுத்தும் தேவையில் இருக்­கி­றது. இது­வ­ரையில் முஸ்லிம் சமூ­கத்தில் பெண்­க­ளுக்­கான உடை­யாக "அபாயா" என்ற ஒரு உடை மாத்தி­ரமே இருந்து வந்­துள்­ளது. அதிலும் கறுப்பு நிற ‘அபாயா’ சில கார­ணங்­களை முன்­வைத்து பர­வ­லாக அணி­யப்­ப­டு­கி­றது. எனினும் இஸ்லாம் எங்கும் உடை விட­யத்தில் நிறங்­களை நிபந்­த­னை­யாக்­க­வில்லை என்­பதை நினைவில் கொள்வோம். முஸ்லிம் ஆண்கள் பல்­வே­று­பட்ட உடை­களை பல்­வே­று­பட்ட நிறங்­களில் அணி­கின்ற அதே­வேளை முஸ்லிம் பெண்கள் "கறுப்பு அபாயா" என்ற ஓர் உடை அமைப்­போடு வரை­ய­றுக்­கப்­பட்­டு­விட்­டனர். இது இன்­னொரு வகையில் பெண்­க­ளுக்குச் செய்யும் அநீ­தியும் கூட.  எப்­போதும் முஸ்லிம் சமூகம் தமக்­கா­னதை தாம் உரு­வாக்கிக் கொள்­வதோ உற்­பத்தி செய்­வதோ இல்லை. எப்­போதும் நுகர்­வோ­ராகவே இருந்­து­விட்டுப் போக நினைக்­கிறோம். எப்­போதும் மற்­றொரு சமூ­கத்­திடம் எமக்­கா­னதை உரு­வாக்கித் தரும்­படி கையேந்தி நிற்­பதே நம் வாடிக்­கை­யா­கி­விட்­டது. ஆடை விட­யத்­திலும் இக் கசப்­பான உண்­மையே நம் நடை­மு­றையில் உள்­ளது.  எனவே, முஸ்லிம் சமூ­கத்தின் தலைமை அமைப்­புக்கள் இது விட­ய­மாக சிந்­திக்கும் தேவை உண­ரப்­ப­டு­கி­றது. அதற்­கான தீர்வின் முதற்­ப­டி­யா­கவே இவ்­வா­லோ­ச­னையை முன்­வைக்­கிறேன்...

நம் சமூ­கத்தில் தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தேர்ந்த பல ஆடை வடி­வ­மைப்­பா­ளர்கள் காணப்­ப­டு­கி­றார்கள். அவர்­களில் பலர் அல்­லது பல நிறு­வ­னங்கள் வாரந்­தோறும் நூற்­றுக்கும் மேற்­பட்ட ஷரீ­அத்­துக்கு அப்­பாற்­பட்ட மேற்­கத்­திய கலா­சார ஆடை­களை வடி­வ­மைத்து ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் விமர்­சை­யாக அறி­முகம் செய்து சந்­தைப்­ப­டுத்­து­கின்­ற­மையை அறியக் கிடைக்­கி­றது. குறிப்­பாக இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான முன்­னணி நிறு­வ­னங்­களே இவற்றில் முக்­கிய பங்­கேற்­கி­றார்கள். இவ்­வா­றாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் உடைகள் தொலைக்­காட்­சி­களில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு சமூக வலை­த­ளங்­க­ளு­டா­கவும் முஸ்லிம் பெண்­களின் கைகளை வந்­த­டை­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்­திடம் ஒரு மாற்­றீடு இல்­லா­தி­ருப்­பதால் இவ்­வா­றான மேற்­கத்­திய உடை­களின் பால் எம் சமூ­கமும் ஈர்க்­கப்­ப­டு­கி­றது.  எனவே, இவ்­வா­றான உடை­களின் மோகத்­தி­லி­ருந்து நம் சமூ­கத்தின் கவ­னத்தை இஸ்லா­மிய உடை­களின் பால் திசை திருப்ப வேண்­டு­மாயின் நாம் நம் பெண்­க­ளுக்­கான இஸ்­லா­மிய உடை­களை வடி­வ­மைத்து அறி­மு­கம்­செய்­வது முஸ்லிம் பெண்­களின் உடை கலா­சா­ரத்தில் நாம் எடுக்கும் ஒரு காத்­தி­ர­மான புதிய முயற்­சி­யா­கவும் தீர்­வா­கவும் அமையும். 

ஆகையால், மேற்­கு­றிப்­பிட்ட ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­க­ளிடம் இஸ்­லா­மிய ஷரீஅத் வரை­ய­றுத்த நிபந்­த­னை­க­ளுடன் கூடிய முஸ்லிம் பெண்­க­ளுக்­கான இஸ்­லா­மிய உடை­களை வடி­வ­மைக்க எமது சமூகத் தலை­மைகள் வேண்­டுகோள் விடுக்கலாம். அவ்வாறு வடிவமைக்கப்படும் ஆடைகள் இஸ்லாமிய சமூக தலைமை அமைப்புக்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவை இஸ்லாமிய உடை என தீர்மானிக்கப்பட்ட பின் அவற்றை சந்தைப்படுத்தும் அனுமதியை வழங்கலாம். அவ்வாறான ஆடைகளை இஸ்லாமிய உடையாக நம் பெண்களுக்கு நாம் சிபாரிசு செய்யலாம். 

4 comments:

  1. உண்மையான விடயங்கள்.. நடைமுறை உலகில் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒன்று இந்த ஆடை கலாசாரம்

    ReplyDelete
  2. இந்தப் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். ஏதோ கதைகளில் வரும் ஆவி உலகத்தை ஞாபகப்படுத்துகிறது. இவர்களின் குழந்தைகள் அருகில் செல்லுமா என்பதே சந்தேகம்தான்.

    ReplyDelete
  3. The above picture and heading compelling to wear non-black, another biggest injustice to the democratic society.

    It is not one of these conditions that it should be black. A woman may wear whatever she wants, so long as she does not wear a colour that is only for men , and she does not wear a garment that is an adornment in itself, i.e., decorated and adorned in such a way that it attracts the gaze of men, because of the general meaning of the verse (interpretation of the meaning):
    “…and not to show off their adornment…” [al-Noor 24:31]

    Wearing black for women is not a must. They may wear other colours that are worn only by women, do not attract attention and do not provoke desire.
    Many women choose to wear black, not because it is obligatory, but because it is farthest removed from being an adornment. “…and not to show off their adornment…” [al-Noor 24:31]
    There are reports which indicate that the women of the Sahaabah used to wear black. Abu Dawood (4101) narrated that Umm Salamah said: “When the words ‘and to draw their veils all over Juyoobihinna (i.e. their bodies, faces, necks and bosoms)’ [al-Noor 24:31 – interpretation of the meaning] were revealed, the women of the Ansaar went out looking as if there were crows on their heads because of their garments.” This is to be understood as meaning that those clothes were black in colour.

    ReplyDelete
  4. பாராட்டப்பட வேண்டிய கருத்துக்கள். ஆடை வடிவமைப்பாளர்கள்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளை கணுக்கால்களுக்கு மேலால் இருப்பதனையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இஸ்லாமிய சமூக அமைப்பின் தலைமை இத்தகு உடைகளுக்கு 'ஹலால் ஆடை' சான்றிதழ் வழங்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.