Header Ads



பிரான்ஸ் வீழ்ந்தது, போர்த்துக்கல் அணி செம்பியன்


யூரோ கிண்ண  கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற போர்த்துக்கல் அணி செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.

ஐரோப்பிய  நாடுகள்  மாத்திரம் பங்கேற்ற இந்தத் தொடரில் கிரிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அணி சிறப்பான வெற்றியொன்றை பதிவு செள்துள்ளது.

இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 1-0 என வீழ்த்தி செம்பியன் பட்டத்ததை வென்று போர்த்துக்கல் ரசிகர்களுக்கு மாபெறும் விருந்து படைத்துள்ளது போர்த்துக்கல் அணி.

நேற்று (10) இடம்பெற்ற இறுதிப்போட்டி  ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

கோல் போஸ்டிற்கு அருகில் பந்துகள் பறக்க, கோல் கீப்பர்களின் தடு்ப்பு ஒரு பந்தினைக் கூட கோலினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

இவ்வாறு இரு அணிகளும் கோல் அடிக்க முற்பட்ட போதிலும் முதல் பாதி இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவு செய்தது.

இந்நிலையில் முதல் பாதியில் காயம் காரணமாக அணித்தலைவர் ரொனால்டோ கண்ணீர் சிந்தியபடி மைதானத்தில் இருந்து வெளியேற போர்த்துக்கல் அணி ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாய் தோன்றியது.

அணித்தலைவர் வெளியேறினாலும் அணியின்  வீரர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் அமைந்தது போர்த்துக்கள் அணியின் வீரர்களின் சிறப்பான செயற்பாடுகள்.

இந்நிலையில் இரண்டாவது சுற்றும் விறுவிறுப்பாக செல்ல  இரண்டு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில் நேரம் முடிவடைந்தது.

இதன் காரணமா இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி நேரத்தில் போர்த்துக்கல்  அணியின் சார்பில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட ஆன்டனியோ ஈடர் 109 நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியில் போர்த்தக்கல் அணி 1-0 என செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.


No comments

Powered by Blogger.