Header Ads



’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரணையை தொடங்கியது

’பீஸ்’ டிவிக்கு தடை விதித்ததை தொடர்ந்து ’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரணையை தொடங்கியது.

ஜாகிர் நாயக்கின் டிவிக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து ’பீஸ்’ என்ற பெயருடன் தொடங்கும் பள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று அந்நாட்டு அரசு விசாரணையை தொடங்கி உள்ளது.

’பீஸ்’ என்ற பெயருடன் எத்தனை பள்ளிகள் செயல்படுகிறது என்பது தொடர்பாக வங்காளதேசம் அரசிடம் பிரத்யேக தரவு இல்லாத நிலையில், அதிகாரிகள் வங்காளதேசத்தில் 28 பள்ளிகள் ’பீஸ்’ என்ற பெயருடன் செயல்படுகிறது என்று கூறிஉள்ளனர். தலைநகர் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் ’பீஸ்’ என்ற பெயரை இணைத்து  ஜாகிர் நாயக்கின் கொள்கையுடன் இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என பிடிநியூஸ்24 டாட் காம் செய்தி வெளியிட்டு உள்ளது. இப்போது அரசு ’பீஸ்’ என்ற பெயரில் செயல்படும் பள்ளிகள் தொடர்பாக விசாரிக்கிறது.

வங்காளதேச அரசு 20 பீஸ் டிவிகள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

“இந்த பள்ளிகள் ஜாகிர் நாயக்கின் கொள்கைகளை பின்பற்றி இருந்தால், நடவடிக்கைகளை சந்திக்கும்,” என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

டாக்கா பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் பேசுகையில், லால்மாதியாவில் மட்டும் பீஸ் என்ற பெயருடன் செயல்பட ஆங்கில வழி பள்ளிக்கூடத்திற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டது என்று கூறிஉள்ளனர். மற்றவை எதுவும் இதுபோன்ற அனுமதியை பெறவில்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “இதுபோன்ற பள்ளிகள் தொடர்பாக விசாரித்து வருகிறோம்,” என்று வங்காளதேச கல்வித்துறை மந்திரி நுருல் இஸ்லாம் நாகித் கூறிஉள்ளார். இதுபோன்ற பள்ளிகளின் தன்மையை கல்வி வாரியம் பரிசோதனை செய்யும் என்று டாக்கா பள்ளி கல்வி வாரிய அதிகாரி ரகுமான் கூறிஉள்ளார். டாக்காவில் இதுபோன்ற பீஸ் என்ற பெயரில் செயல்படும் பள்ளிகள் தரப்பில் அனுமதி எதுவும் கோரப்படவில்லை என்று கல்வித்துறை வாரிய அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

4 comments:

  1. This news means Banladesh also thinks that Jakir Nayak is a terrorist.
    Then how can you blame India?

    ReplyDelete
  2. Secular minded dirty Bandgladeshi Governement. Keep of Inida.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Secular government in India is good one, but if it is in Bangladesh , it will not be good one. What a justice?

    ReplyDelete

Powered by Blogger.