Header Ads



கனடாவில் சிறந்த முன்மாதிரி - முஸ்லிம்களுக்கு ஆதரவாக முக்கிய சாசனம் வெளியீடு


கனடாவில் செயற்படும் மனித உரிமை குழுக்கள் இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிடும் சாசனமொன்றை அங்கீகரித்துள்ளன. கனடாவிலுள்ள ஆறு நகரங்களில் இந்த சாசனத்தை கனேடிய முஸ்லீம்களின் தேசிய பேரவை வெளியிட்டு வைத்துள்ளது.

இந்த அங்கீகாரம் வெளியிடும் அறிமுக நிகழ்வுகளில் அந்நாட்டு அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த சாசனத்தில், வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு மற்றும் ஏனைய வெறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு கனேடிய சமூகத்தில் இடம்வழங்கப்படாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாமிய எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் குறைப்பதற்குமான கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம், சிவில் சமூக குழுக்கள், அரச அதிகாரிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் உதவி வழங்க வேண்டும் எனவும் அந்த சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஜெக்மித் சிங், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாக்கும்

No comments

Powered by Blogger.