சந்திரிக்கா குறித்து, மைத்திரியிடம் முறைப்பாடு
சந்திரிக்கா கமிட்டி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் குழுவாக ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கக் கூடாது என, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஒரு தொகுதியினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரைவில் இந்த தரப்பினர் நேரடியாக முறைப்பாடு செய்ய உள்ளனர்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சி மறுசீரமைப்பு குறித்த யோசனைத் திட்டமொன்றை மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த விடயங்கள் குறித்து கட்சியின் முக்கியஸ்தர்தகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சட்சி மறுசீரமைப்பு குறித்த முக்கிய யோசனைத் திட்டங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment