Header Ads



ஜாகிர் நயீக், வெளியிட்டுள்ள அறிக்கை

பயங்கரவாதம் அல்லது வன்முறைக்கு நான் எந்த வகையிலும் ஆதரவு அளிக்க மாட்டேன்" என தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜாகீர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை

என்னை பொறுத்தவரை, உலகளவில் ஊடகங்கள் மிக முக்கிய ஆயுதமாக இருகின்றன. அவை நினைத்தால் ஹூரோவை வில்லன் ஆக்கலாம். வில்லனை ஹூரோ ஆக்கலாம்.

கடந்த ஜூலை 1 ம் தேதி டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

ஊடகங்களில் எனது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் முழுமையாக இல்லாமல் அங்காங்கு வெட்டி பொருள் திரிபுடன் ஒளிப்பரப்பபடுகின்றது.

ஊடகங்களுக்கு பேட்டியளிக்க விரும்புகிறேன். ஆனால், எனது பேட்டி முழுமையாக வெளியிடப்படாது என அஞ்சுகிறேன். எனது பேட்டி எடிட் செய்யாமல், பொருள் திரிக்கப்படாமல் வெளியிடப்படுமானால் நான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தயாராக உள்ளேன்.

என் மீ்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சில நாட்களுக்குள் விளக்கம் அளிப்பேன். அந்த விளக்கம் சமூக வலைதளங்களில் வெளியிடுவதோடு ஊடகங்களுக்கும் கொடுப்பேன்.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தற்போது வரை இந்திய அரசு தரப்பில் எந்த அதிகாரியும் என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கவில்லை. அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான விளக்கம் அளிப்பதற்கு தயாராக உள்ளேன்.

இறுதியாக, நான் கூறுவது "பயங்கரவாதம் அல்லது வன்முறைக்கு நான் எந்த வகையிலும் ஆதரவு அளிக்க மாட்டேன். என்னுடைய பேச்சுகளில் எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசவில்லை. என் பேச்சை வன்முறையை துாண்டும் வகையில் தவறாக திரித்து வெளியிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்".இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. All mighty Allah is with us, don't worry about

    ReplyDelete
  2. All mighty Allah is with us, don't worry about

    ReplyDelete
  3. Allah will help you through the tough times.

    ReplyDelete
  4. do not worry dr zakir naik allah help you

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. insha allah all mighgty allah is with us dont worry about

      Delete
  6. insha allah all might allah with us dont worry about

    ReplyDelete

Powered by Blogger.