அம்பாந்தோட்டையில் களமிறங்கவுள்ள புலனாய்வுப் பிரிவினர் - எதற்குத் தெரியுமா..?
இன்றுமுதல் -12- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புலனாய்வு பிரிவுக்குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காம யாத்திரைக் காலம் ஆரம்பாகியிருப்பதனால் வன விலங்குகளை விசமூட்டிக் கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
யால, புன்தல, உடவலவ உள்ளிட்ட வனவிலங்கு சரணாலயங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறு அதிகளவு மான் வேட்டை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம், திஸ்ஸமஹாரம, அம்பலான்தொட்ட, உடவலவ, எம்பிலிப்பிட்டி, தனமல்வில, வெல்லவாய, புத்தள, மொனராகல் போன்ற இடங்களில் புலனாய்வுப் பிரிவு குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
வேட்டையாடுவோர் மற்றும் இறைச்சி வைத்திருப்போருக்கு எதிராககடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழங்கு அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment