Header Ads



கைத் தொலைபேசி விற்பனை, நிலையங்களுக்கு இனி சிக்கல்

அனுமதிப் பத்திரம் இன்றி கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

அதன்படி குறித்த விற்பனை நிலையங்கள் பல தற்போது பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இது வரை பதிவு செய்யப்படாத விற்பனை நிலையங்கள் எதிர்வரும் சில தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கூறியுள்ளது. 

எவ்வாறாயினும் பதிவு செய்யப்படாது, கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.