மைத்திரியின் நினைவு கல் உடைப்பு - மிகுந்த மனவேதனை என, ஜனாதிபதி செயலகம் அறிக்கை
மட்டகளப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, தேரர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றது. இது குறித்து ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விகாரையில் எதனையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதிக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விகாரைகளில் நடைபெறும் தான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியை கலந்துக்கொள்ளுமாறு பல அழைப்புக்கள் வருவதாகவும், எனினும் நேரம் கிடைக்கும் போது மாத்திரம் ஜனாதிபதி அவற்றில் கலந்துக்கொள்வதைப் பற்றி சிந்திப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும் மங்களராம விகாராதிபதியினால் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்று -11- ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விகாரையின் தேரரின் இந்த செயல் தொடர்பில் மிகுந்த மனவேதனை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment