Header Ads



"முட்டாள்தனமான செல்பிகளை, எடுக்க வேண்டாம்"


முட்டாள்தனமான, அபாயகரமான செல்ஃபிகளை எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு குரேஷியா சுற்றுலாத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

குரேஷியாவின் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்ற நிலையில் அவ்வாறு செல்பவர்கள் மலை உச்சி, குன்று போன்ற சவாலான இடங்களில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பதாகவும் அவ்வாறாக புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இறப்பவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், அந்நாட்டு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்  'அன்பான சுற்றுலா பயணிகளே நாங்கள் உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். அதே போன்று நீங்களும் உங்கள் மீது மரியாதை கொள்ள வேண்டிய நேரம் இது. ஆபத்தான, முட்டாள்தனமான முறையில் செல்ஃபி எடுப்பதை தவிருங்கள் என குரேஷியா நாட்டின் மீட்பு பணி அதிகாரிகள், தங்களது அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.