வற் தொடர்பில் அமைச்சர்கள் முரண்பாடு..? மைத்திரி நாடு திரும்பியதும் தீர்மானம்
திருத்தங்ளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வற் வரி சட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
வற் வரி உயர்வு குறித்த யோசனைகள் முன்வைக்கவும் இந்த யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி லண்டன் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
வற் வரி திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் அமைச்சில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூடி இது பற்றி தீர்மானித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் சில அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆண்டில் வற் வரி அதிகரிப்பினை அமுல்படுத்த வேண்டாம் என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு நிதி அமைச்சர் உறுதியான பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment