"முஸ்லிம்களின் உள்ளத்தில் குர்ஆன்" - சிங்களவர்களுக்கு உண்மையை விளக்க தீர்மானம்
பொதுபலசேனா உட்பட மற்றும் சில இனவாத பௌத்த அமைப்புகள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் புனித குர்ஆனுக்கும் எதிராக மேற்கொள்ளும் பிரசாரங்கள் தவறானவை என்பதை நிரூபிப்பதற்கு தேசிய சூரா கவுன்ஸில் பல திட்டங்களை வகுத்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் தேசிய சூரா கவுன்சில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான செயற்றிட்டங்களை வகுப்பதற்கு இன்றும் நாளையும் தேசிய சூரா கவுன்ஸில் நிர்வாகிகள் ஒன்று கூடி பல தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
தேசிய சூரா கவுன்ஸிலின் பொருளாளர் மௌலவி சியாத் இப்றாஹீமை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு பொதுபலசேனா அமைப்பு புனித குர்ஆனை தொடராக சவாலுக்குட்படுத்தி வரும் நிலையில் சூரா கவுன்ஸிலின் நடவடிக்கைகள் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘ஞானசார தேரர் முஸ்லிம்களையும் புனித குர்ஆனையும் சவாலுக்குட்படுத்தி வருவதும் விவாதங்களை நடத்துவதற்கு அழைப்பு விடுப்பதும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியாகும்.
இதன் மூலம் முஸ்லிம்களை இந்நாட்டின் எதிரிகளாகவும் பௌத்தத்தின் துரோகிகளாகவும் சித்தரிக்க முயற்சிக்கின்றார்.
அதனால் முஸ்லிம்களும் முஸ்லிம் இயக்கங்களும் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.
புனித குர்ஆனை ஞானசார தேரர் கூறுவது போன்று எவராலும் அழித்துவிட முடியாது. முஸ்லிம்களின் உள்ளத்தில் குர்ஆன் குடி கொண்டுள்ளது ஆழமாகப் பதிந்துள்ளது. விவாதத்துக்கு அழைத்து முஸ்லிம்களை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.
ஞானசார தேரர் உட்பட ஏனைய இனவாத அமைப்புகளின் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளும்; குர்ஆன் மீதான தவறான கருத்துகளும்; பிழையானவை என்பதை நிரூபிப்பதற்கு சூரா சபை ஊடகவியலாளர் குழுவொன்றினை நியமித்து அதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு உண்மை நிலைமையை விளக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் சட்டமொன்று உள்ளது சட்டத்தை மீறுபவர்களுக்கும்; இனவாத உணர்வுகளைத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Please be ready with your replies to Aallegations , but do not go public until such time it is requested by law or utmost necessity.
ReplyDelete