புர்ஹான் வாணி படுகொலை - பாகிஸ்தான் கடும் கண்டனம்
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தனிநாடு கோரி போராடும் ஹிஷ்புல் முஜாகிதீன் அமைப்பின் முன்னனி உறுப்பினரான புர்ஹான் வாணி கொல்லப்பட்டதற்கும், இதைதொடர்ந்து நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்ததற்கும் பாகிஸ்தான் கடும கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, நன்கு அறியப்பட்ட 21 வயதான புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சனிக்கிழமை அன்று புர்ஹான் வானியின் இறுதி சடங்குகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி கலந்துகொண்டனர். இதன்போது, ராணுவம், பொலிஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புர்ஹான் கொலையை தொடர்ந்து அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் பலியானர்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்ஹான் வாணி கொல்லப்பட்டது வருந்தத்தக்கது.
இத்தகைய செயல்கள் காஷ்மீரிகள் அடிப்படை மனித உரிமை மீறலாகும் மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான அவர்களின் கோரிக்கையிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களை தடுத்துவிட முடியாது.
Post a Comment