ஆபிரிக்காவில் பிரச்சார பணியில் ஜாகிர் - இந்திய ஊடகங்களுக்கு இன்று பேட்டி வழங்குவார்
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு இன்று -14- ‘ஸ்கைப்’ வழியாக ஸாகிர் நாயக் விளக்கம் அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஸாகிர் நாயக்கின் பிரச்சாரங்களை ஒளிபரப்பி வரும் அவருக்குச் சொந்தமான ‘பீஸ் டி.வி’ சனலுக்கு பங்களாதேஷ் அரசு நேற்று தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி உள்நாட்டில் யாராவது அந்த சனலை ஒளிபரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஸாகிர் நாயக் மக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியதும் அவரை கைது செய்ய வேண்டும் என சிவசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ’உம்ரா’ செய்வதற்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற ஸாகிர் நாயக் அங்கிருந்தபடியே ஆபிரிக்க நாடுகளில் சில பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் ஆபிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஸாகிர் நாயக், இன்று வியாழக்கிழமை இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் இருந்தபடி, ‘ஸ்கைப்’ வழியாக ஸாகிர் நாயக் அளிக்கும் பேட்டி மும்பை ஒர்லி பகுதியில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
இந்த பேட்டியில் பிரபல பொலிவூட் ட்டியில் பிரபல பொலிவூட் நட்சத்திரங்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டாக்கா ஹோட்டலின் மீது தீவிரவாத தாக்குதலை ஸாகிர் நாயக் தூண்டிவிட்டதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படும் பங்களாதேஷ் நாளிதழும் ‘அப்படியொரு தகவலை நாங்கள் வெளியிடவில்லை’ என மறுப்புத் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் பிரபல நாளிதழான ‘டெய்லி ஸ்டார்’ இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி மக்களை கொல்லும்படி ஸாகிர் நாயக் எந்த தீவிரவாதியையும் தூண்டிவிட்டதாக நாங்கள் செய்தி வெளியிடவில்லை.
நாங்கள் வெளியிட்ட செய்தியில், ‘டாக்கா ஹோட்டல் தாக்குதலில் தொடர்புடைய ஒரு தீவிரவாதி ஸாகிர் நாயக்கின் பேச்சை மேற்கோள் காட்டி முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்தை பேஸ்புக் மூலம் பரப்பி பிரசாரம் செய்து வந்துள்ளார்.
பங்களாதேஷில் தனக்கு இலட்சக்கணக்கான அபிமானிகள் உள்ளதாக கூறிவரும் ஸாகிர் நாயக்கின் முந்தைய பேச்சை அவரது பேச்சின் உள்கருத்துக்கு மாறுபட்ட வகையில் திரித்து வெளியிட சில இளைஞர்களின் புத்தி எப்படி எல்லாம் செயல்படுகிறது? என்பதைத்தான் எங்களது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்’ என்று டெய்லி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post a Comment