இஸ்லாமிய உம்மத்தை, குதறக் காத்திருக்கும் ஊடக யுத்தம் - ஜாகிரை பலி கொடுப்போமா..?
-AHAMEDSHA AHAMED JAMSATH - TURKEY-
ஸாகிர் நாயக்கின் மீதான காவிகளின் பாய்ச்சல் அவரின் சமகால சிந்தனை ரீதியான புரட்சியை கண்டு வெகுண்டெழுந்த சர்வதேச யூத பயங்கரவாத,இலுமினாட்டிய சதிவலை பின்னல்களின் ஒரு நீட்சியே.மேற்கின் சிந்தனை புரட்சிக்கும் கிழக்கின் ஊடக புரட்சிக்கும் சவால்விடும் வகையில் ஸாகிர் நாயக் சமகால ஊடகங்களை தனது ஆயுத தளபாடத்துக்கான களஞ்சியமாக செவ்வனே செய்துகாட்டினார்.இஸ்லாமிய தரப்பில் இந்தளவு ஊடக புரட்சியை பயன்படுத்தி கிழக்கு தேசங்களிள் இருந்து பிராந்திய,மேற்கத்திய,சர்வதேச எல்லையை நோக்கி இலக்கை நகர்த்தும் பிரபலம் ஸாகிர் நாயக் போன்று எவரும் எந்த மதத்திலும் இல்லை.எந்த சிந்தனை பிரிவிலும் இருக்கவில்லை.இதுவே அவரை நோக்கிய கூட்டு காவிகளின் காய் நகர்த்தலுக்கு பிரதான காரணமாகும்.
அமைதி வழியை அழைப்பு பணியின் அடிநாதமாக எடுத்து செயல்படும் அவர்மீது நஞ்சேற்றி எய்தப்படும் அம்பின் முனைகளை மலுங்க செய்யவதற்காக கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் வரத்தான் செய்வர்.இது ஸாகிர் நாயக்குடன் மட்டும் சுருங்கிய எதிர்ப்பலை அல்ல.ஸாகிர் நாயக் நம்பிய அதே நம்பிகைப்பிரகாரம் கருத்து சுதந்திரத்தை நம்பும் அணைத்து தரப்பின் மீதான தாக்குதல் என்றே இதனை எதிர்ப்பவர்கள் கருதுகின்றனர்.ஸாகிர் நாயக் ஒரு இயக்க உருவாக்க பின்னனியில் நின்று செயல்பட்ட செயல்பாட்டுக்காக குற்றம்பிடிக்கப்படவில்லை.மேற்கின் ஊடக யுத்தத்துக்கு போட்டியாக ஸாகிர் நாயக் இருக்கின்றார் என்ற காரணமே அவரின் மீதான காவிகளின் திட்டமிட்ட பாய்ச்சலுக்கு காரணம்.
ஸாகிர் நாயக் விவகாரம் இந்தளவு ஊடகங்களால் கவனிக்கப்படவும்,அவர்சார்பாக இணையங்கள்,சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுக்கவும் மிக பிரதான காரணம் அவர் சமகால ஊடகங்களை கொண்டு இஸ்லாத்துக்கு எதிரான ஊடகங்களுக்கு சவாலாக இருந்தார் என்பதே ஆகும்.இந்த ஊடக புரட்சியை கைவிட்டுவிட்டு ஜிஹாத் கோஷங்களால் ஈர்க்கப்பட்ட பாமர தலைவர்களுக்கு இல்லாத ஆதரவு அவருக்கு ஏன் வந்தது என்ற கேள்வியால் நொந்தவர்கள் அவர் சார் தலைவர்களையே நொந்து கொள்ள வேண்டுமே தவிர ஸாகிர் நாயக்கை அல்ல.ஸாகிர் நாயக் எதிர்க்கப்படவும் ஆதரிக்கபடவும் காரணம் ஒன்றுதான்.அவர் நம்பிய ஊடக ஆயுதம் பாசிச,காவிய சிந்தனை புரட்சிக்கு சவால் என்பதும் அதே ஊடகங்களால் இஸ்லாமிய உள்ளங்களில் அவர் அமைதியை போதித்தார் என்பதுமே ஆகும்.ஸாகிர் நாயக்கின் ஊடக நம்பிக்கையை எதிர்கொள்ள முடியாதவர்கள் அவர் நம்பும் அமைதி வழியை தீவிரவாதமாக காட்டவே இப்படியான சூழ்ச்சிகளை அவருக்கு எதிராக முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் சிலர் ஸாகிர் நாயக் விவகாரத்தை வெறும் சுருங்கிய இயக்க மேலோட்ட சிந்தனையில் நின்று பார்க்கின்றனர்.இவர்களின் பார்வையில் மேலோங்கிய இயக்க வெறி அவர்மீது கட்டவிழ்க்கப்பட்ட முழு மனித நம்பிக்கைகளின் மீது போடப்பட்ட அதிகார அத்துமீறல்களையும் ஊடக நம்பிக்கையின் மீதான அடக்குமுறை பற்றியும் புரிவதை தடுக்கிறது.இவர்கள் வணங்கும் இயக்கத்துக்கு அடிமை சேவகம் செய்யவே இந்த ஜாஹிலிய எதிர்ப்புவாதம் பயன்படுமே தவிர முழு இஸ்லாமிய உம்மத்தை குதற காத்திருக்கும் ஊடக யுத்தத்தை எதிர்கொள்ளவோ சிந்தனை யுத்தத்தை எதிர்க்கவோ உதவாது என்பதை இவர்கள் புரியப்போவதில்லை.இவர்களின் குருட்டு நம்பிக்கையில் நின்று எழுந்த இயக்க பழிவாங்கல் காணல்களை கண்டு தாகம் தீர்க்க காத்திருந்து அகமகிழும் பாமரத்தனமான,குருட்டுத்தனமான நம்பிக்கை போன்றதாகும் என்பதில் சந்தேகமில்லை.
உண்மையில் ஊடகங்கள் இன்றளவும் உலகை ஆட்டிப்படைக்கின்றது.முஸ்லிம் உம்மத்திமன் போராளியாக, ஊடக பலம் கொண்டு செயல்படும் தலைவர் என்ற வகையில் அவருக்காக பிரார்த்திப்போம்
ReplyDeleteஉண்மையில் ஊடகங்கள் இன்றளவும் உலகை ஆட்டிப்படைக்கின்றது.முஸ்லிம் உம்மத்திமன் போராளியாக, ஊடக பலம் கொண்டு செயல்படும் தலைவர் என்ற வகையில் அவருக்காக பிரார்த்திப்போம்
ReplyDelete