பல மாதங்கள் நடந்த, விசாரணையின் பின்னே நாமல் கைது - சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ
கூட்டு எதிர்க்கட்சியினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த தரப்பினரின் நிழல் அமைச்சரவை விமர்சனத்துக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க முனைவது கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான உதய கம்பன்பிலவும் விமல் வீரவன்சவுமே என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
மருதானையில் அமைந்துள்ள சி. எஸ். ஆர் சன சமூக நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவுக்கும் போதே அவர் இந்த குற்றச்ச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
கூட்டு எதிர்கட்சியினரின் நிழல் அமைச்சரவை கேளிக்கையானதாகவும் விமர்சனத்துக்கு உற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. கூட்டு எதிர்கட்சின் அமைச்சர்கள் சிலர் தாம் கடந்த அரசாங்கத்தில் ஒரு போதும் பிழைகளை செய்ய வில்லை என பல இடங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற உறுப்பினர்களான உதய கம்பன்பிலவும் விமல் வீரவன்சவுமே நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான 16 வழக்குகள் எம்மிடம் இருக்கின்றன. இந்த வழக்கு மிக விரைவில் நாம் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றோம். குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அமைச்சர்களான உதய கம்பன்பில இ மஹிந்தானந்த அழுத் கமகே மற்றும் இன்னும் சில அமைச்சர்களுக்கு எதிராக நாம் வழக்கு தொடர இருக்கின்றோம்.
மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கலாம் என அமைச்சர் உதய கம்மன்பில கருத்தொன்றை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். மத்திய வங்கி ஆளுநர் ஒரு போதும் அவ்வாறு செய்வதற்கான அவசியம் இல்லை ஆனால் உதய கம்மன்பிலவின் இந்த கருத்து கேளிக்கையானதாக இருக்கிறது. உண்மையில் தமிழீழ விடுதலை புலிகளுடன் பணத்தை பங்கிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வீடுகளை அமைத்து தருவதாக கூறி வஞ்சகங்கள் செய்தது உதய கம்பன்விலவும் அவருடன் இருக்கின்ற ஏனைய அரசியல் வாதிகளும் தான் என்பதை மறுப்பதற்கு இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதய நிலையில் ஆட்சியில் இருந்திருந்தால் நல்ல அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். நாடு இனவாதத்தால் பிளவு பட்டு மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும். ஆனால் கடந்த வருடம் ஜனவரி 08 ம் திகதி மலர்ந்த நல்லாட்சியால் மட்டும் தான் நாடு சீரான நிலையில் சென்றுக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் மக்கள் சரியான ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்திருக்கிறார்கள்.
கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை நம்பி மக்கள் ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் மக்களின் முகங்களில் சேறு பூசும் செயற்பாடுகளே என்றார்.
நாமல் ராஜபக்ஷவின் கைது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது ஒரு போதும் அரசியல் பலி வாங்கல் இல்லை. கிட்ட தட்ட ஒன்று அரை வருட விசாரணைக்கு பிறகு அவர் தகுந்த காரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம் தன் கடமையை செய்கின்றது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினர் கைது செய்யப்படலாம்.
Post a Comment