குப்பை பிரச்சினை - ஒருவர் பலி, 6 பேர் படுகாயம் - ஹங்குரங்கெத்தயில் சம்பவம்
ஹங்குரங்கெத்த ஹேவாஹெட்ட துல்கந்துர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், மாரிமுத்து (வயது 57) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில், ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் துல்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்தரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அறுவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கால்வாயில் குப்பையை எறிவது தொடர்பில் இரு குடும்பங்களுக்கு இடையில் இருந்துவந்த நீண்டகால முரண்பாடே, மேற்படி சம்பவத்துக்கு காரணமென ஹங்குரங்கெத்த பொலிஸார் கூறினர்.

Post a Comment