Header Ads



அனுராதபுரத்தில் பிடிபட்ட 5 அடி விலாங்கு மீன், தெஹிவளைக்குச் செல்கிறது


அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து 5 அடி நீளமான சுமார் 12 கிலோ கிராம் எடைகொண்ட விலாங்கு மீன் பிடிப்பட்டுள்ளது.

திப்பட்டுவாவே பகுதியில் மகாவலி ஆற்றில் இந்த மீனை தான் நேற்று பிடித்ததாக கெகிராவ கொரசகல்ல பிரதேசத்தை சேர்ந்த் தினுஷ சம்பத் ஜயவர்தன என்பவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அளவு பெரிய விலாங்கு மீனை நான் என் வாழ்நாளில் பார்த்தில்லை. இவை எமது சுற்றாடலில் வாழும் அப்பாவி உயிரினங்கள்.

விலாங்கு மீன் நல்ல உடல் நிலையை கொண்டுள்ளதுடன் இதன் எடை சுமார் 12 கிலோ கிராமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குளத்திலோ அல்லது ஆற்றிலேயே விட்டால் எவராது கொன்று சாப்பிட்டு விடுவார்கள். அப்படி நடந்தால், பெரும் அநீயாயம்.

இந்த பகுதிகளில் தற்போது விலாங்கு மீன்களை அதிகமான காணமுடிவதில்லை.

நாட்டில் உள்ள அனைவரும் இதனை பார்ப்பதற்காக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இதனை ஒப்படைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சந்ததிக்காக இந்த உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என சம்பத் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.