Header Ads



சுதந்திரக் கட்சியிலிருந்து 15 பேருக்கு கல்தா - ஜனாதிபதி ஆலோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைப்பாளர்களை அதிலிருந்து விலக்குவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்ததிசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பணிகளை செய்யாத,செய்ய முடியாத அமைப்பாளர்களே இவ்வாறு பதவி நீக்கம்செய்யப்படவுள்ளதாகவும்,இவர்களை மேலும் கட்சியில் வைத்திருப்பதனால்கட்சிக்கோ,நாட்டிற்கோ எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகஅதிகபட்ச அமைப்பு பலங்களை கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பற்றாக்குறை நிலவுகின்ற தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்காகபிரபலமான,அனுபவமிக்க,மக்களுடன் நெருங்கிய உறவைப் பேணுபவர்களை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக உள்ள பலர்கட்சியை தவறாக வழிநடத்துவதுடன்,கட்சி இரண்டாக பிளவு படுவதற்கானவேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் துமிந்த திசாநாயக்கதெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.