இராணுவ முகாமில் தீ விபத்து - உடனடியாக CID விசாரணை ஆரம்பம்
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்விபத்தில் காயமடைந்த இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இவ்வித்து தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு இரகசிய பொலிஸாருக்கு அராங்கம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வாகனங்கள போன்றன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தீ பரவலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சாலாவ பிரதேசத்தின் 6 கிலோமீற்றர் தூரம் பாதுகாப்பற்ற வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது 2 கிலோமீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகர ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment