Header Ads



"உயிர் கொ­டுத்­த உத்­த­மியின் வாரிசு­கள்"

-விடிவெள்ளி SNM.Suhail-

ஏறக்­கு­றைய முந்­நூறு ஆண்­டு­க­ளுக்கு முன் கண்­டியில் ஒரு மன்னன் இருந்தான். அவனை இரண்டாம் இரா­ஜ­சிங்கன் என்று கூறுவர்.  இந்த அரசன் காலத்தில் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை போர்த்­துக்­கேயர் ஆண்­டனர்.

அவர்கள் ஐரோப்­பா­வி­லி­ருந்து வந்­த­வர்கள். அவர்­க­ளுக்கும் இரா­ஜ­சிங்­க­னுக்கும் சண்டை மூண்­டது. அச்­சண்­டையில் அரசன் தோல்­வி­ய­டைந்தான். தோல்­வி­ய­டைந்த மன்னன் ஒளிந்து ஓடினான்.

ஓடும்­போது போர்த்­துக்­கேயர் அவனைக் கண்­டு­விட்­டனர். துரத்திச் சென்­றனர். ஓடிய அரசன் ஊவா மாகா­ணத்­தி­லுள்ள 'பங்­கர கம்­மன' என்ற கிரா­மத்தை அடைந்தான். அங்கு நின்ற ஒரு பெரிய பலா மரத்தைக் கண்டான். அதில் ஆள் நுழை­யக்­கூ­டிய ஒரு பெரிய பொந்து இருந்­தது. அதனுள் அவன் புகுந்து ஒளிந்தான்.

அந்த பலா மரத்­துக்கு அருகில் ஒரு மாட்டுக் கொட்டில் இருந்­தது. அங்கே பசுக்கள் நின்­றன. ஒரு பசுவில் முஸ்லிம் பெண் ஒருத்தி பால் கறந்து கொண்­டி­ருந்தாள். அவள் அரசன் மரப் பொந்துள் ஒளிந்­ததை கண்டாள். 

சிறிது நேரத்தில் அர­சனைத் துரத்திச் சென்ற போர்த்­துக்­கேய வீரர்­களும் அவ்­வி­டத்தை அடைந்­தார்கள். அரசன் திடீர் என மறைந்­த­தை­யிட்டு ஆத்­திரம் கொண்­டார்கள். அங்கும் இங்கும் தேடி­னார்கள். பக்­கத்தில் பால் கறந்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண்ணைக் கண்­டார்கள். அப்­பெண்­ணிடம் சென்று, 'இங்கே வந்த இர­ாஜ­சிங்கன் எங்கே?' என்று அதட்­டி­னார்கள். 

அவள் பயத்தால் நடுங்­கினாள். முக்­காடைச் சரிப்­ப­டுத்­திக்­கொண்டாள். போர்த்­துக்­கேய வீரர்கள் மீண்டும் மீண்டும் அதட்டிக் கேட்­டார்கள். ''கண்டேன்'' என்று சொல்லி மன்­னனைக் காட்­டிக்­கொ­டுக்­கவும் அந்தப் பெண் விரும்­ப­வில்லை. ''காண­வில்லை'' என்று பொய் சொல்­லவும் விரும்­ப­வில்லை. மௌனமாய் இருந்தாள். 

அதனால், அரசன் ஒளிந்­தி­ருத்த இடத்தை அவர்­களால் அறிய முடி­ய­வில்லை. போர்த்­துக்­கேய வீரர்­க­ளுக்கு பெருந் கோபம் மூண்­டது. உடனே இரக்­க­மில்­லாமல் அவளை கண்­ட­துண்­ட­மாக வெட்­டி­னார்கள். 

போர்த்­துக்­கேய வீரர் அங்­கி­ருந்து சென்ற பின் இரா­ஜ­சிங்க மன்னன் வெளியே வந்தான். அந்த முஸ்லிம் பெண் கொல்­லப்­பட்டுக் கிடப்­பதைக் கண்டான்; பெருந்­துயர் கொண்டான். ''எனக்­காக இவள் தன் உயி­ரைக்­கொ­டுத்­தாளே'' என்று இரங்­கினான். ''மா ரெக லே'' என்னைக் காத்த இரத்­தமே என்று கத்­தினான். அவள் செய்த தியா­கத்தை மெச்­சினான். அந்த பெண்ணை அவனால் மறக்­கவே முடி­ய­வில்லை. 

இரா­ஜ­சிங்கன் மீண்டும் அர­ச­னானான். அவளின் நினை­வாக 'பங்­கர கம்­மன' என்ற கிரா­மத்தை அவ­ளு­டைய உற­வி­னர்­க­ளுக்கு கொடுத்தான். 

இந்த கட்­டுரை 1980 ஆம் ஆண்­டு­களில் நாலாம் ஆண்டு தமிழ் புத்­த­கத்தில் 'உயிர் கொடுத்த உத்தமி' எனும் தலைப்பில் பதி­வா­கி­யி­ருந்­தது. இது இலங்கை முஸ்­லிம்கள் நாட்டை எந்­த­ள­விற்கு நேசித்­தனர். சிங்­கள மன்­னர்­க­ளுடன் எவ்­வாறு விசு­வா­ச­மாக இருந்­தனர். அத்­துடன் பெரும்­பான்மை மக்­க­ளுடன் எவ்­வா­றெல்லாம் நெருக்­க­மான உற­வு­களை பேணி வந்­தனர் என்­ப­தற்கு இது போன்ற பல உதா­ரண சம்­ப­வங்கள் இலங்கை வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளன. அந்த ஆத்­மார்த்­த­மான உற­வு­களில் விரிசல் தோன்­றி­யி­ருப்­ப­துபோல் தெரி­கி­றது.

உண்­மையில் அவ்­வா­றா­ன­தொரு ஓட்டை விழுந்­துள்­ளதா அல்­லது அவ்­வா­ற­ன­தொரு மாயை தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றதா என்­கிற சந்­தே­கங்கள் மேலி­டு­கின்­றன.

குறிப்­பாக 2011 ஆம் ஆண்டு அநு­ரா­த­பு­ரத்தில் தர்­கா தாக்­கப்­பட்­ட­மை­ய­டுத்து தம்­புள்ளை முதல் கிராண்ட்பாஸ் தொட்டு அளுத்­கமை, தர்­கா­நகர் பேரு­வளை பகு­தியில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் வரை முஸ்லிம் சமூ­கத்தின் மீது கடும்­போக்­கா­ளர்­களின் செய­பா­டுகள் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை நீடித்­தது.

அத்­துடன் ஹலால் சான்­றி­த­ழுக்கு எழுந்த எதிர்ப்பும் மாட்­டி­றைச்­சியை தடை செய்ய வேண்டும் என்­கிற கோசமும் வக்பு மற்றும் இஸ்­லா­மிய தனியார் சட்­டத்­திற்கு எதி­ரான வாதங்­களும் கிளம்பின. இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுக்­காத முன்­னைய அர­சாங்கம் அவர்­களின் செயற்­பா­டு­களுக் தீனி போடும் வித­மாக அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­தாக அப்­போ­டைய எதி­ர­ணிகள் குற்றம் சுமத்­தின. 

2015 ஆம் ஆண்டு மலர்ந்த நல்­லாட்­சிக்கு பின்பும் பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் முதல் மஹி­யங்­கனை பகு­தியில் ஏற்­பட்ட இன விரி­சல்கள் வரை கவ­லை­யான சம்­ப­வங்கள் இன்னும் தொடர்­கின்­றன. மழை நின்ற பின்பும் தூறல் தொடர்­வது போல கடந்த ஆட்­சியில் இன­வா­திகள் விதைத்த நச்சுக் கருத்­துக்­களின் விளைவை நாடு இன்னும் எதிர்­கொண்டு வரு­கின்­றது. 

அந்த அடிப்­ப­டையில் கடந்த வெசக் போயா தினத்­தன்று மஹி­யங்­கனை பௌத்த விகா­ரையில்  முஸ்­லிம்­களை மோச­மாக தூற்றி  சமய சொற்­பொ­ழிவு நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து  முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் பௌத்த கொடியை எரித்­த­தாக மஹி­யங்­கனை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 8 இளை­ஞர்­களும் ஊர் மக்­க­ளினால் பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு பின்னர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டனர்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் குறிப்­பி­டப்­பட்ட பங்­கர கம்­மன கிரா­மத்தை சேர்ந்­த­வர்­களே. இக்­கி­ரா­மத்­த­வர்கள் நாட்­டுப்­பட்­டுள்­ள­வர்கள் என்­ப­தையும் மிகவும் பண்­புள்­ள­வர்கள் என்­பதையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர்.

பங்­கர கம்­மன கிரா­ம­வா­சிகள் சந்­தேக நபர்­க­ளான இளை­ஞர்­களை பொலிஸில் கைய­ளித்து இன நல்­லி­ணக்­கத்­திற்கு பங்கம் ஏற்­ப­டா­வண்ணம் பக்­கு­வ­மாக செயற்­பட்­டமை, அன்று 2 ஆம் இரா­ஜ­சிங்க மன்­னனை காட்­டிக்­கொ­டுக்­காது பொய் கூற­வி­ரும்­பாது உயிரை தியாகம் செய்த உத்­த­மியின் தொன்­மை­யான வர­லாற்று சம்­வத்தை மீண்டும் ஞாப­க­மூட்­டு­கின்­றது. 

எனினும் மஹி­யங்­கன –- பங்­கர கம்­மன விவ­காரம் சிலரால் திட்­ட­மிட்டு பெரிது படுத்­தப்­ப­டு­கின்­றது. ஊடக ஒழுக்க விதிகள் தெரி­யாத சமூக ஊடக பாவ­னை­யா­ளர்கள் சிலரும் இவ்­வி­வ­கா­ரத்தை ஊதிப் பெருப்­பிக்­கின்­றனர். சிறிய சம்­ப­வங்­களை கூட மிகைப்­ப­டுத்தி செய்தி வெளி­யி­டு­வ­தனால் மற்­று­மொரு இன விரி­ச­லுக்கு அடித்­த­ள­மி­டு­வ­தாக அமையும். பங்­கர கம்­மன மக்கள் இதற்கு பெரும் கண்­ட­னங்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். 

ஏற்­க­னவே இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறித்து மாத்­திரம் முஸ்லிம் சமூகம் கொதித்­தெ­ழுந்­ததால் முஸ்லிம் சமூக பிரச்­சி­னைகள் மூடி மறைக்­கப்­ப­ட்டுக்கொண்டிருப்பதை குறிப்­பி­டலாம்.

அத்­துடன் இன­வாத செயற்­பா­டு­களை பயன்­ப­டுத்தி அர­சியல் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் சுய நல அர­சி­யல்­வா­தி­களை முக்­கிய கார­ண­கர்த்­தா­வாக கொள்­ளலாம்.

ஒரு பிர­தே­சத்தில் அசா­தா­ரண சம்­ப­வ­மொன்று நிக­ழு­மாயின் அங்­குள்ள அர­சியல் தலை­வர்­களை தவிர வேறு­பி­ர­தேச அர­சி­யல்­வா­திகள் அப்­ப­கு­தி­க­ளுக்கு செல்­வதும் விவ­கா­ரத்தில் மூக்கை நுழைப்­பதும் குறித்த சம்­ப­வங்­களை பூதா­க­ர­மாக்­கு­வ­தா­கவே அமை­கின்­றது. இது கடந்த காலங்­களில் ஏரா­ள­மாக இடம்­பெற்­றுள்­ளன. இவற்றை தவிர்த்துக்­கொள்­ளு­மாறு பங்­கர கம்­மன பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது. 

இத­னி­டையே நேற்­றைய தினம் சந்­தேக நபர்­க­ளான 8 இளை­ஞர்­களும் மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இது இவ்­வா­றி­ருக்க பங்­கர கம்­மன கிரா­மத்தில் மக்­களை விழிப்­பு­ணர்­வூட்டும் செயற்­பாட்­டினை பங்­கர கம்மன ஜும்ஆ பள்­ளி­வாசல் மேற்­கொண்டு வருக்­கின்­றது என தெரி­விக்­கின்றார் பங்­க­ர­ கம்­மன ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் அலி அக்பர். இதற்­க­மைய 25 பேர் கொண்ட குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்கப்பட்டுள்ளது. 25 பேர் கொண்ட குழு எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது என்றார்.

பங்­க­ர­கம்­மன மற்றும் மஹி­யங்­கன பகு­தியில் தொடர்ந்து பொலிஸ் பாது­காப்பு ரோந்­துச்­சேவை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே பொலி­ஸா­ரினால் சமா­தானப் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான சுமு­க­மான சமா­தான நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும்­போக்­கா­ளர்கள் தொடர்ந்தும் இடை­யூ­றாக இருந்து வரு­கின்­றனர். அத்துடன், முஸ்லிம் சமூகத்திலும் சிலர் தமது சுயநல அரசியலுக்காக ஊடங்களை பயன்படுத்தி இவ்விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கின்றனர். 

பங்கரகம்மனை முஸ்லிம் இளைஞர்களுக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது என்று அங்குள்ள பெரும்பான்மையின மக்கள் கூறியுள்ளதாக அறியக் கூடியதாகவுள்ளது. எனவே இவர்களுக்காக வாதாடுவதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் முன்வர வேண்டும் என்பதுடன் வழக்கை வேறு ஒரு நீதிமன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழக்குகளுக்கு செலவு செய்யும் அளவில் அவர்களுடைய ஏழைப் பெற்றோர்களுக்கு பொருளாதார பலம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது போன்ற சாதாரண விடயத்தை வைத்து வரலாற்று தொன்மை மிக்க பங்கர கம்மன மக்களைப் பலிக்கடாவாக்கி இன நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்பதே சகவாழ்வை விரும்புவோரின் வேண்டுகோள். 

No comments

Powered by Blogger.