இஸ்ரேல் உறவு, துருக்கிக்கு இராஜதந்திர வெற்றியா..?
காசாவில் மனிதாபிமான நிலையை மேம்படுத்த இஸ்ரேலுடன் உடன்பாடொன்று எட்டப்பட்டதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசி ஊடே குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையிலான உறவுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு இணக்கம் ஏற்பட்டதாக இரு தரப்பு அதிகாரிகளும் உறுதி அளித்திருக்கும் நிலையிலேயே எர்துகானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2010இல் காசா முற்றுகையை மீறி உதவிகளுடன் கப்பல் மூலம் அங்கு நுழைய முயன்றபோது இஸ்ரேலிய கடற்படையினரின் அத்துமீறலால் 10 துருக்கிய பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இரு நாட்டு உறவுகள் முறிந்தன.
இந்த முன்னேற்றம் தொடர்பில் அப்பாஸ் திருப்தி வெளியிட்டதாக துருக்கி ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான உடன்பாடு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்பாட்டுக்கு துருக்கி விடுத்த மூன்று நிபந்தனைகளில் ஒன்றின்படி இஸ்ரேல் ஏற்கனவே மேற்படி சம்பவத்திற்கு மன்னிப் கேட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாட்டாளர்களின் மாவி மர்மரா கப்பல் மீதான இஸ்ரேலின் உயிர்ப்பலி கொண்ட தாக்குதலுக்கு அது 20 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தமது நிபந்தனைகள் ஏற்கப்பட்ட நிலையில் இடம்பெறும் இந்த உடன்படிக்கை துருக்கிக்கு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகும் என்று துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். எனினும் துருக்கியின் மற்றுமொரு நிபந்தனையான காசா மீதான முற்றுகையை அகற்ற இஸ்ரேல் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் எட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி துருக்கிக்கு காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் ஏனைய இராணுவ உற்பத்தியற்ற உதவிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனை போன்ற உட்கட்டமைப்பு வேலைகளை செய்யவும் துருக்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று காசாவின் குடிநீர் மற்றும் மின்சக்தி விநியோகத்தில் நீடிக்கும் சிக்கலை சரி செய்யவும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் ஆட்சி நிலவும் காசாவை இஸ்ரேல் கடந்த 2006 தொடக்கம் முடக்கி வைத்துள்ளது.
May Allah Bless All our Muslim Leaders in their effort to ESTABLISH TAWHEED around the world and in taking measures to protect people of TAWHEED around the world.
ReplyDeleteWhen Saudi make any deal with isreal... IHWANEES, JAMATH ISLAMEES and related groups make nise in all media as though Saudi has done a big mistake... BUT I am sure at this moment all those groups will keep silent as they FAN of turkey president who is a supporter of IHWANEEs.
BUT we respect Turkey president and Saudi Leaders when they go for any agreement with JEWs of ISRAEL with the good intention of supporting Islam and Its people.
May Allah BLess all our Muslims Leaders and Let Make our Brothers and Sisters Not stage hatrates and protest against out Muslim Leaders around the world, even if the leaders are not perfect but establishing 5 times prayer to Allah ( as stated by Muhammed peace be upon him)