Header Ads



முஸ்லிம் ஆளுனரை நியமிக்க வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் குற்றம் - அஸ்வர்

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

ஒரு முஸ்லிம் ஆளுனர் நிச்சயமாக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பெரும் குற்றமாகவும் குறையாகவும் முஸ்லிம்கள் சமுதாயத்திலே காணப்படும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,

நோன்பு திறக்கும் வைபவமொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க பேருவளை சென்றிருந்த போது, ஒரு முஸ்லிம் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்று அங்குள்ள தலைவர்கள் வேண்டிக் கொண்டுள்ளார்கள்.  இது நிச்சயம் நடக்க வேண்டும். ஏனென்றால், மாகாண சபைகள் உருவாகிய பொழுது, தென் மாகாணத்துக்கு முதல் ஆளுனராக எம்.ஏ. பாக்கீர் மாக்கார் நியமனம் பெற்றார். மேல் மாகாணத்துக்கு செய்யத் மர்ஹும் அலவி மௌலானா நியமனம் பெற்றார். அவர் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு யாரும் ஒரு முஸ்லிம் ஆளுனரை நியமிக்கவில்லை. இதுவும் அரசியல் ரீதியிலே முஸ்லிம் சம்பந்தமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தி, ஒர் ஏக்கத்தை மற்றும் ஏமாற்றத்தை முஸ்லிம்கள் மத்தியிலே எற்படுத்தக் கூடியது. ஒரு முஸ்லிம் ஆளுனர் நிச்சயமாக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பெரும் குற்றமாகவும் குறையாகவும் முஸ்லிம்கள் சமுதாயத்திலே காணப்படும்.  

எனவே, முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து  இந்த  விடயத்தை ஜனாதிபதி மட்டத்திலே பேசி இவைகளுக்கு ஒரு முடிவு கட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று நான் சமூகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார். 

2 comments:

  1. Yes Dried Brain,
    We don't know how you get such wonderful ideas.... All the problems of Muslim community will be solved. Please appoint a Governor. ?????

    ReplyDelete
  2. You were a minister under Appachchi's regime.You could have put this kind request to him.Were you dreaming then?

    ReplyDelete

Powered by Blogger.