பேஸ்புக்கில் நண்பர்களிடமிருந்து, நோட்டிபிகேஷன் வந்தால் ஜாக்கிரதை
பேஸ்புக்கில் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளம் பேஸ்புக். இதில் கருத்துகள், புகைப்படங்கள், செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் போய்விட்டது.
பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிஃபிகேஷன்களால் நமது லேப்டாப், மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பிற்கு வைரஸ்கள் பரவுகின்றன.
புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மால்வேர் லேப்டாப்பிற்கு டவுன்லோடு ஆகிறது. இதனை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் ஆக்டிவேட் ஆகிறது. குரோம் மட்டுமல்லாமல், எட்ஜ், பயர்ஃபாக்ஸ், சபாரி, ஒப்பேரா மூலம் இந்தவகை வைரஸ்கள் பரவுகின்றன.
அதனால் உங்கள் பக்கத்திற்கு வரும் நோட்டி பிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனை தீர்க்கப்படும் வரை நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அதனை கிளிக் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.
Post a Comment