Header Ads



சாலாவ இராணுவம் முகாம் வெடிப்பும் - சில முக்கிய தகவல்களும்..!

1

சாலாவ இராணுவம் முகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கிளம்பிய புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது. குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் என சூழல் நலன்கள் , உடல்நலன் மற்றும் உணவு பராமரிப்பு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

2

கொஸ்கம இராணுவ  முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன.

3

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறினார்.

4

கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது கிணறுகளை மூடி வைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழியும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தில் அப்பிரதேசம் புகைமண்டலமாக காணப்படுகிறது. இன்று குறித்த பிரதேசத்தில் மழை பொழிந்தால் அப் புகை மண்டலத்தில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் நீருடன் கலக்கும் வாய்ப்பு காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

6

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, முப்படை தளபதி மற்றும் சில அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

No comments

Powered by Blogger.