இலங்கை இங்கிலாந்து அணி கிரிக்கெட் - புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் ஓவல் மைதானத்திற்கு முன்பாக சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படும் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த குற்றங்களில் ஈடுபட்டதுடன், பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு காரணமான இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டகாரர்கள் இதன் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முதன்னரும் இலங்கை அணியினர் பங்குபற்றிய கிரிக்கெட் போட்டியின் போதும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அத்துடன், பல இடையூறுகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேப்போல் வேல்ஸ் பிராந்தியத்தின் காடிப் நகரில், சொய்பா மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது பார்வையாளர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன், பெண்ணொருவருக்கு மிளகாய்த் தூளினை வீசி தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த முறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது தகுந்த பாதுகாப்பை வழங்க இங்கிலாந்து பொலிஸாரும், இலங்கை தூதுவராலயமும் தவறியதன் விளைவே இன்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள காரணம்.
இம்முறையும் இதற்கான சரியான சட்டநடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தவறும் பட்சத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளின் இறுதியில் மாபெரும் கலகத்தை இவர்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக குறித் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puligal appaavi makkalai evvalavu vendumaanaalum kondrirukkalaam...athu perithillai. Avargalukku silai veiiththu anjali nadaththanum.
ReplyDeletePorin pin avargalukku punarvaalvu alikka padanum. Raanuvaththa thandikkanum. Ithu enna niyaayam? Ithu pondra madayargal Gotabaya Rajapakshavin kaalaththil ilangai pakkam nokkuvathatke anjiya kpottam, Ippothu veera veshm podugiraargal.
Ivargal ilangai naattin thanmaanaththai vitkum koottam. Illayendraal oru cricket pottikku mun ethirppu aarppaattam nadaththuvaargala? Ivargalukku sindhikkum aatrale kidayaathaa?
Inakkalavaram thuvanga kaaranaamaayirundha JR avargalai pugalum indha koottam innum vishaththaiye kakkugirathu...Brexit ai thodarndhu Ivargal naadukadaththappada koodiya vaaippu undu endru arindhumaa ivargalin indha kooththu...
இவ்வாறானவர்கள் மேற்கத்திய நாட்டில் சுக போகங்களுடன் இருந்து கொண்டு இவ்வாறான நடவடிக்கையில் இறங்கும் போது இலங்கையில் வாழும் அப்பாவித்தமிழ் மக்கள் தாம் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் காரணம் இலங்கை அரசு ஏதாவது உரிமைகளை கொடுத்து தமிழ் மக்களை ஆதரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் சிங்களப்பேரினவாதிகளால் முட்டுக்கட்டைக்கு உள்ளாவததை நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம்
ReplyDeleteThis people stay in UK and again trying to demolish the unity between the Sri Lankan community. These people dont have any work. They are enjoying in UK very well. UK government has to take measure against these people for violating the country rules and regulations or else these people should be deported to their respective country to gain more freedom forever.
ReplyDelete