தற்போது நாட்டை ஒன்று சேர்ப்பதற்கு, ஒரு யுத்தம் நடைபெறுகிறது - ரணில்
யுத்தத்தில் போராடியவர்களை முறையற்ற ரீதியில் நடத்திய ஆட்சியானது தற்போது இல்லை எனவும், நல்லாட்சியில் இது போன்ற செயற்பாடுகள் முடிவுற்றதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தாவையில், சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியின் பிரதிநிதித்துவத்தை பெறும் நிகழ்வின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
மேலும், வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஐ.தே.கட்சியுடன் பிரிதொரு கட்சியின் தலைவரும் இணைந்து பயணிப்பது சிறந்த விடயம் என தெரிவித்தார்.
தற்போது நாட்டை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. இந்த யுத்தத்தில் சரத் பொன்சேகா போன்ற தலைவர்களும் சேர்ந்து யுத்தத்தை நடாத்துவது வெற்றியடைவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக தெளிவுபடுத்தினார்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என இதன்போது சரத் பொன்சேகாவிற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும், சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐ.தே.கட்சியின் உறுப்புரிமை கிடைத்துள்ளதாகவும் இதன்பொது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Post a Comment