Header Ads



வஸீம் தாஜுதீன் கொலை - 5 வீடியோக்கள் கனடாவுக்கு அனுப்பி வைப்பு


றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதற்காக கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவானுக்கு நேற்று -28- அறிவித்தார்.

இந்த வீடியோ காட்சிகளின் ஆய்வு பற்றிய முன்னேற்றம் இந்த வருடம் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் தெரிய வருமென சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க கூறினார்.

கொழும்பில் இரண்டு சந்திகளிலிருந்து எடுக்கப்பட்ட ஐந்து வீடியோ பதிவுகளில் வாகனத்தின் இலக்கத்தகடு மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் போன்ற விபரங்கள் தெரியவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்வியகம் முன்னதாக நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தது. 

No comments

Powered by Blogger.