293 இலங்கையர்கள் வௌிநாடுகளில் தடுத்துவைப்பு
குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் வௌிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவினூடாக சென்று வௌிநாடுகளில் தொழில் புரிந்தமை மற்றும் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சுற்றுலா வீசாவில் எவரும் வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
இவ்வாறான செயல்கள் பாரிய அளவில் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டங்கள் மீறப்பட்டு சுற்றுலா வீசாவை பயன்படுத்தி வௌிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், இதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் நிலையங்களை இரத்து செய்யப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாயப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment