மஹிந்தவை 'முன்னாள் ஜனாதிபதி' என அழைக்கமுடியுமா..? SLFP செயலாளருக்கு சந்தேகம்
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய முடிவை எண்ணி தற்போது பெரிதும் வருந்துகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னர் நாட்டை ஆண்ட ஜனாதிபதிகளை “முன்னாள் ஜனாதிபதி” என்ற அடைமொழியை உபயோகித்து அழைப்பது வழமையான விடயமாகும்.
ஆனால் இதற்கு முன்னர் நாட்டை ஆண்ட மஹிந்த ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதி என்று அழைப்பதற்கு முடியுமா? என இதன் போது துமிந்த திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.
தற்போது யாரும் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதி என அழைப்பதில்லை. இதற்குக் காரணம் தாமே என மஹிந்த ராஜபக்ச தற்போது பெரிதும் வருந்துவதாக தெரிவித்தார்.
இரண்டுமுறை ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்ட பின்னர் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோற்றமையால், பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி வெற்றி பெற்று தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார் என துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் காலி மேதினக் கூட்டத்திற்கும், கிருலப்பனை மேதினக் கூட்டத்திற்கும் சென்றவர்கள் குறித்து மேதினக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும்.
அறிக்கை கிடைத்த பின்னரே கிருலப்பனை கூட்டத்திற்கு சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் ஒழுக்காற்றுக் குழு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Post a Comment