எர்துகான் வலியுறுத்தல், துருக்கி பாராளுமன்றத்தில் மோதல் - பல MP கள் காயம்
துருக்கி பாராளுமன்றத்தில் ஆளும் ஏ.கே. கட்சியினருக்கும் குர்திஷ் ஆதரவு அரசியல்வாதிகளுக்கும் இடையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எம்.பிக்களுக்கு வழக்குகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் சிறப்புரிமையை அகற்றும் விவகாரத்திலேயே நேற்று முன்தினம் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தம்மை இலக்குவைத்தே அரசு இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாக குர்திஷ் ஆதரவு எம்.பிக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன்போது இரு தரப்பினரும் மேஜைகள் மீது ஏறிக்கொண்டு ஒருவருக்கொருவர் தக்கிக்கொண்டதோடு தண்ணீர் போத்தல்களை வீசி எறிந்து மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலால் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் காயமடைந்தனர்.
துருக்கியில் தடைசெய்யப்பட்ட ஆயுதக் குழுவான குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக இயங்கும் குர்திஷ் ஆதரவு எச்.டி.பி. கட்சி உறுப்பினர்கள் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று ஏ.கே. கட்சி நிறுவனரான ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் வலியுறுத்தியுள்ளார்.
என்ன நிகழ்ந்தாலும் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று அரச பேச்சாளர் குர்துல்முஸ் உறுதி அளித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் இடம்பெற்ற அரசியலமைப்பு அமர்வும் குழப்பங்கள் காரணமாக தடங்கலுக்கு உள்ளானது.
It is a good move, even if a minister involved crime will be taken to court.
ReplyDeleteWhy they oppose?
HOPE the decision by TYIB is great