கபீர் ஹாசிம், வெளியிட்டுள்ள அறிக்கை
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தக் கட்சியிடமிருந்தும் போட்டியில்லை என கட்சியின் பொதச் செயலாளர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் கபிர் ஹாசிம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடக அறிக்கையின் ஊடாக மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் ஒன்று இல்லாத போதிலும் அரசியல் கட்சிகளின் பலத்தை பரீட்சித்து பார்க்க ஓர் களமாக அண்மைய மே தினம் அமைந்திருந்தது.
மே தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மிகவும் சிறந்த முறையில் நிரூபித்துள்ளதாகவும் இதனால் தெளிவாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு போட்டி எதுவும் கிடையாது.
வேறு எந்த கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு போட்டியில்லை என்பது மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
எம்முடன் தொழிலாளர் தினத்தை அனுஸ்டிக்குமாறு விடுத்த கோரிக்கையை மதித்த லட்சக் கணக்கான மக்கள் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர்.
அண்மைக் காலத்தில் இலங்கை மே தின வரலாற்றில் காணக்கிடைத்த மிகப் பெரிய சனக் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கடச்p இம்முறை மே தினக் கூட்டத்தில் திரட்டியிருந்தது.
இன மத மொழி பேதங்களை களைந்து வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்தமை எம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றது.
இது தொடர்பிலான உண்மையான கௌரவம் மழை வெயில் மற்றும் நோய்களை கருத்திற் கொள்ளாது வருகை தந்த அனைத்து கட்சி ஆதரவாளர்களையுமே சாரும்.
எனவே, கூட்டத்திலும் பேரணியிலும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி பாராட்டுகின்றேன் என கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
Post a Comment