Header Ads



பாரிய முதலீடுகளை செய்வதற்காக, இலங்கை வருகிறார் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ்

-அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-

சவூதி நாட்டின் இளவரசர் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மீண்டும் இலங்கையில் பாரிய முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதன் நிமித்தமாக இம்மாதத்தில் இடம்பெறும் இளவரசர் அவர்களின் இலங்கை விஜயத்தை இலங்கைக்கான சவூதி தூதரகமும் ஊர்ஜிதம் செய்துள்ளதுடன், இளவரசரின் விஜயம் குறித்த ஏற்பாடுகளை இலங்கைக்கான சவூதி தூதுவர் அஸ்மி தாஸிம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இளவரசர் வெகு விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசின் முக்கியஸ்தர்கள் மற்றும்  உயரதிகாரிகளுடன் செயற்திறன் மிக்க ஆக்கபூர்வமான இரு தரப்புப் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையின் இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது 17 மில்லியன் பெறுமதியான உதவிகளை இளவரசர் இலங்கைக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச ரீதியிலே பல்வேறுபட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபாடு கொண்ட இளவரசர்  இலங்கையிலும் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்விருப்பமானது  இலங்கையினுடைய  பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை தோற்றுவிக்கும். இளவரசரின் பயணத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வரத்தக அமைச்சர் மலிக் விக்ரமசிங்க ஆகியோரை இளவரசர் சந்திக்கவுள்ளார். மேலும்,இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தன்னுடைய முழுப்பங்களிப்பைச் செய்வதாக உறுதியளித்தார்.

இலங்கையில் அந்நியச் செலவாணியில் சவூதியில் இருந்து 62 வீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் சவூதி அரசானது நன்கொடை எனும் அடிப்படையில் இலங்கையில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளது. இவ்விடயங்களில் சவூதி அரச பரம்பரையும் இளவரசரும் கூடிய கரிசனை செலுத்தி வருவது வரவேற்கத் தக்கதாகும்.

தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல், அனைத்து மதம் சார்ந்த மக்களுக்கும் சவூதி நாட்டின் உதவிகள் இன்றியமையாத ஒரு தேவையாக அமைந்திருப்பது நிதர்சனமாகும். இலங்கை மற்றும் சவூதிக்கான நட்புறவு இன்று நேற்றல்ல பல வருடங்களாக சுமூகமான முறையில் அமையப் பெற்றுள்ளமை எமது இலங்கை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

மேலும் அண்மைக் காளங்களில் சவூதி இளவரசர் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் இஸ்ரேலின் தூதுவராக செயற்படுகிறார் என ஊடகங்களில் பரவும் செய்தியானது உண்மைக்கு புறம்பானதாகும். இஸ்ரேலை பலமாக எதிர்க்கும் நாடுகளில் சவூதி முன்னிலை வகிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இளவரசர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வகையான அடிப்படையற்ற வதந்திகள் பரவுவதை முஸ்லிம்கள் நம்பக் கூடாது என்பதை இவ்விடத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும், விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இளவரசர் அவர்களின் வருகையை பயன்படுத்தி நாம் நாட்டிற்கு பாரிய அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசியல் பேதமின்றி இவ்வகையான இணக்கப்பாடுகள் தொடரும் போது நாடு இன்னுமின்னும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதை முன் மொழிய விரும்புகிறேன்.

ஊடகப் பிரிவு

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

3 comments:

  1. Well done ... It is a good initiative

    ReplyDelete
  2. Good news , But don't bring more waahabism in the form of help, We are already suffering from this cursed brand of islam.

    ReplyDelete
  3. Well done....

    But this Haroon Aadam (commented person)still living inside the juncle... Come on come outside and see the world...read quraan...and try to know the the real meaning and try to know what quraan says....dont be foolish by washing the Mullah's (big sheithaans) foots....

    ReplyDelete

Powered by Blogger.