Header Ads



பாலித தெவரப்பெருமக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெவரப்பெரும மற்றும் ரணவீர ஆகியோருக்கு எதிராக உச்ச அளவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன பரிந்துரை செய்பய்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் விசாரணை அறிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.