Header Ads



முப்படையினருக்கும் நன்றி, உயிரை பணயம்வைத்து செயற்படுவோருக்கு பாராட்டு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுக்கும் ஜனாதிபதி ,இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அதேபோல் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தமது உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளையும், நாளை ஏற்படக்கூடிய நிலைமைகளையும் கருத்தில் கொண்டு மூன்று வழிகளில் செயற்படுவதற்கு எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தலே இதில் முக்கியத்துவம் பெறுவதாகவும், இரண்டாவதாக மழை அதிகரிக்குமாக இருந்தால் அதற்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மூன்றாவதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள், சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான பிரச்சினைகளின் போது எழுகின்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.