ஹஸன் அலியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த, அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானம்
-மூத்த ஊடகவிலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (03) இடம்பெற்று சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள் என சித்திரிக்கப்படும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ.ஹஸன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் உட்படலானவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் ஹஸன் அலி மற்றும் பஷீர் ஷேகு தாவூத் உட்படலான அனைவரும் மிக நெருக்மான முறையில் கலந்துரையாடி தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கட்சிக்குள் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ. ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் அவருக்கு நியாயத்தை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹசன் அலி அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் ஆனால் அதற்கு முதல் முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரசும் ஏமாற்றப்பட்டுள்ளது இந்த தலைமை இனால் ( 18 வது திருத்தத் சட்டம், கசினோ சட்டம், தேவினுகம சட்டம், பள்ளிவாசல்கள் உடைப்பு....இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம் ). இந்த நாட்டின் எதிர்கால சந்ததி சகல உரிமையும் பெற்று வாழ வேண்டுமானால் இந்த தலைமையில் மாற்றம் வேண்டும்.
ReplyDelete