Header Ads



"பிரபாகரனின் ஆவி வெளிவந்துள்ள நிலையில், மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்"

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆவி வெளிவந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடு நியாயமானதா? என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் வடக்கு, கிழக்குக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியினை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளார். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாகளை அகற்றுமாறு, தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் செல்வாக்கும் மேற்குலக நாடுகளின் செல்வாக்கும், இலங்கயைில் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது'.

இவற்றுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தனி தமிழீழம் அமைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில், மஹிந்த ராஸபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை எந்த வகையில் நியாயமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Kind of foolish living in our country.cant help anyway .no good future our country

    ReplyDelete

Powered by Blogger.