Header Ads



ஒஸ்மானியாவை மீளெழுச்சி பெறவைக்க முன்வாருங்கள்

-Jan Mohamed-

அண்மையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அதிபர் அறை உட்பட சில வகுப்பறைகளையும் அதிபர் எனக்கு காட்டினார். எப்படி இருந்த பாடசாலை இப்படி ஆகிவிட்டதே.

1990 ஒக்டோபரில் நாம் வெளியேற்றப் பட்ட இந்தப் பாடசாலையில் 800 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றார்கள். பெருமதியான புத்தகங்களைக் கொண்ட பெரிய வாசிகசாலை, அரும் பொருட்களையும் தேவையான திரவியங்களையும் கொண்ட விஞ்ஞான் ஆய்வு கூடம், மரவேலை கூடம், என்று வடக்கிலே சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளில் ஒன்றாக யாழ் ஒஸ்மானியா திகழ்ந்தது. விளையாட்டுத் துறையில் அதிக சாதனைகளைப் படைத்த ஒஸ்மானிய 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல மாணவர்களை பல்கலைக்கழகமும் புக வைத்தது. அப்போதிருந்த ஒவ்வொரு வகுப்பறையும் ஆசிரியர் மேசை கதிரை உட்பட 30 மாணவர்களுக்கான கதிரை மேசைகளும் ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்டு காட்சி தரும்.

1990 வெளியேற்றத்தின் பின்னர் ஒஸ்மானியாவின் கதிரைகள், மேசைகள், விஞ்ஞான ஆய்வு கூடப் பொருட்கள் ,வாசிக சாலை புத்தகங்கள் என்பன யாழ்ப்பாணத்தின் சில பாடசாலைகளுக்கு பிரித்து வழங்கப் பட்டுள்ளன. 2003 ஆம் ஆண்டு பாடசாலை மீள் ஆரம்பிக்கப் பட்ட போது பாடசாலையில் எந்தவித தளபாடமும் இருக்க வில்லை. எடுத்தவர்கள் மௌனியாக இருந்து விட்டனர். நமது நிலையோ திண்டாட்டத்தில்.

உடைந்து போன சில கதிரை மேசை என்பன அப்போது ஒஸ்மானியாவுக்கு வழங்கப் பட்டது. இதனுடன் ஆரம்பித்த பாடசாலைக்கு உருப்படியில்லாத கதிரை மேசைகள் மேலும் வழங்கப் பட்டன. இதனால் தான் வகுப்பறைகள் இன்று அழங்கோலமாக காணப் படுகின்றன.

அப்போது ஆசிரியர் அறை நான்குக்கு எட்டு அடி நீளமான மேசையுடன் ஒரே மாதிரியான 12 கதிரைகளையும் கொண்டிருந்தது. இன்று அந்த அறை இருக்கும் நிலையை போட்டோ மூலம் அறிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் மரவேலைக் கூடம் என்பவற்றில் இருந்த மேசைகள் மிகவும் கனமானவை. ஒரு மேசையைத் தூக்க ஆறு பேருக்கு மேல் தேவை .
அவை அப்போது கல்வி அமைச்சராக இருந்த மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் விஷேட பணிப்புரையின் கீழ் வழங்கப் பட்டன. இன்று இவையெல்லாம் அள்ளிச் செல்லப் பட்டுள்ளன.யாழ்ப்பாண வரலாற்றில் இன்னொரு கரைபடிந்த தொல் பொருளாக ஒஸ்மானியா காட்சி அளிக்கின்றது.

வகுப்பறைகளை பார்த்த போது நிலம் வெடித்து மோசமான நிலையில் உள்ளது. லின்டர்களின் மற்றும் பீம்ஸ்களின் கம்பிகள் உக்கி இத்துப் போய் அதனைச் சுற்றியுள்ள சீமெந்து கழன்று விழுகின்றது. இது தற்போது ஒரு ஆபத்தான கட்டிடம். எப்போதும் இடிந்து விழலாம்.

எனவே இக்கட்டிடத்தை உடைத்து விட்டு அல்லது வேறு வகையில் திருத்திக் கட்ட வடமாகாண சபையின் கல்வி அமைச்சிடம் வேண்டு கோள் விடுக்க வேண்டும். மேலும் கதிரை மேசைகள் கேட்டும் கடிதம் அனுப்ப வேண்டும்,. எது எப்படி இருப்பினும் ஆசிரியர் ஓய்வு அறை அதிபர் அறை மற்றும் சில வேலைத் திட்டங்களை நாமே செய்ய வேண்டியிருக்கும். இதற்காக யாராவது முன்வந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.

ஜான்ஸின் அவர்கள் ஒஸ்மானியாவின் 50 வது ஆண்டு அல்ஹிக்மா மலருக்கு எழுதிய கட்டுரையில் ஒஸ்மானிய உருவாக்கியவர்கள் இன்று பலதுறைகளில் முன்னேறி கொடிகட்டிப் பறக்கின்றனர். வைத்தியர்களாக எஞ்சினியர்களாக கணக்காளர்களாக பெரும் வியாபார முதலீட்டு வர்த்தகர்களாக இன்னும் பல துறைகளில் முன்னேறி செல்வந்தர்களாக வாழ்கின்றனர். தமது பாடசாலைக்கு அவர்கள் அள்ளி வழங்கவா மாட்டார்கள்.

இதற்காக யாராவது முன்வந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.

1 comment:

  1. get help of all old boys who live abroad now and ask all Muslim organizations around the world. It is a prime school in north. so all should do what they can to develop it as much as possible it is duty of each Muslim to promote and develop it.. Not jaffna People alone. All should help it.

    ReplyDelete

Powered by Blogger.