காட்டு குதிரைகளை அழிக்க அவுஸ்திரெலியா திட்டம் - கொடுரமானது என ஆர்வலர்கள் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான காட்டு குதிரைகளை கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கும் திட்டம் ஒன்றினை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காட்டு குதிரைகளில் 90 வீதமானவற்றை கொன்றுவிடுவதற்கு நியூ சவுத் வேல்ஸ்ன் மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது
பனி மலைகளில் உள்ள ப்ரம்பீஸ் என அறியப்படும் காட்டு குதிரைகளில் 90 வீதமானவற்றை கொன்றுவிடுவதற்கு நியூ சவுத் வேல்ஸின் மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அழிவின் விளிம்பிலுள்ள பல உயிரினங்கள் வாழ்ந்துவரும் மிக முக்கியமான நீர்வழிகளை தொடர்ச்சியாக இந்தக் காட்டுக் குதிரைகள் பயன்படுத்திவருவதால், அந்த உயிரினங்கள் அழிந்திவிடும் அபாயம் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
காட்டுக் குதிரைகளை பாதுகாக்க செயற்பட்டு வரும் ஆர்வலர்களோ அரசின் இத்திட்டம் முற்றிலும் கொடுரமானது, அவை ஆஸ்திரேலியாவின் நாட்டுப்புற அடையாளங்களின் முக்கியமான ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளனர்.
அந்தக்காட்டு குதிரைகளின் தொகையை அடுத்த 20 ஆண்டுகளில் 6000 இலிருந்து 600 ஆக குறைக்க வேண்டும் என நியூ சவுத் வேல்ஸின் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Post a Comment