பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் பெரிதும் கவலைப்படுகின்றேன் - மைத்திரி உருக்கம்
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் நான் அதிகம் கவலைப்படுகின்றேன். அதுவும் நாளைய தலைமுறையினராக பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் இவ்வாறான முறையில் நடந்து கொண்டமை மிகவும் அவதூறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹொரணை ரோயல் கல்லுாரியின் புதிய கேட்போர் கூட கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில்,
அண்மையில் கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாடசாலை மாணவிகள் இருவர் ரயிலில் மோதி மரணமடைந்த சம்பவம் குறித்து பல ஊடகங்கள் பலவிதமான செய்திகளை வெளியிட்டிருந்தன. அவை எவ்வாறிருப்பினும் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எதிர்கால சந்ததியினரே.
உங்கள் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம். நீங்கள்தான் எமது எதிர்காலம். நீங்கள் அறிவு, விவேகம், புத்தியால் போஷிக்கப்படுவதை நாட்டின் சொத்தாகவே நாம் காண்கின்றோம்.
இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து எனக்கு அறியக்கிடைத்தது. நான் ஒரு நாளும் பாராளுமன்றத்தில் இவ்வாறு யாருக்கும் இடையூறு விளைவித்ததில்லை. நேற்று இந்த அசம்பாவிதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் பாடசாலை மாணவர்கள் பலர் அங்கு இருந்தனர்.
இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படியா நடந்து கொள்வது? என சபாநாயகர் கேள்வியெழுப்பினார். இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Post a Comment