தலையெடுக்கும் பசில், மகிந்தவினால் முக்கிய பொறுப்புக்கள் கையளிப்பு - புதிய பத்திரிகையும் வருகிறது
விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவின் கீழ் செயற்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இது இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சியிற்காக ஊடகங்களுக்கு செவ்வி வழங்குதல், மின்னஞ்சல், அச்சிடல், இணையதள மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தின் செயற்பாடுகள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் அனைத்து பசில் ராஜபக்சவின் கீழ் நடைபெறவுள்ளது.
அத்துடன் ஊடக பிரிவிற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவின் நபர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு நெருங்கிய நான்கு பேர் மாத்திரமே செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடக பிரிவில் நூற்றுக்கு 90 வீதமான அதிகாரம் ராஜபக்சர்களிடமே உள்ளது.
அத்துடன் இதுவரையில் கூட்டு எதிர்க்கட்சிக்காக செயற்படுகின்ற விமல் வீரவனசவின் இணையத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் தனக்கு அவசியமான முழுமையான பிரச்சாரத்தை வழங்குமாறு நாமலினால் விமல் வீரவன்சவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் திட்டம் மற்றும் முதலீடுகளுக்கமைய ஊடகபிரிவிற்காக வார இறுதி பத்திரிகை ஒன்று வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் வாரம் “இரிதா என்ற பெயரில் இந்த பத்திரிகை சந்தைக்கு வரவுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அப்போதைய ஊடக பிரிவில் செயற்பட்ட மொஹான் சமரநாயக்க மற்றும் இரும்பு மோசடி தொடர்பில் பிரபலமான சுதர்மன் ரந்தலியகொடவிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பத்திரிகைக்காக ராஜபக்சர்களின் கருப்பு பணம் முதலீடு செய்யப்படுகின்ற நிலையில் அதனை வேறு நபரின் முதலீடு மற்றும் நிறுவனம் என காட்டுவதற்காக ராஜபக்சர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய விமல், கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் தப்பி கொள்வதற்காக கட்டியெழுப்பப்பட்ட கூட்டு எதிர்கட்சியின் அமைப்பாளர் பிரிவு, ஊடக பிரிவு ஆகிய, இரண்டு முக்கிய பிரிவுகள் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Post a Comment