Header Ads



கூகிள் + யுடியூபுடன் இணைந்து, இஸ்ரேலிய எதிர்ப்பு வீடியோக்களை நீக்க முடிவு...?

இஸ்ரேலின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சிபி ஹோடவ்ளி யுடியுப் மற்றும் கூகுள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் இஸ்ரேலுக்கு எதிராக உள்ள வீடியோக்களை நீக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இஸ்ரேலில் நடந்த கத்திகுத்து சம்பவம், பாலஸ்தீன குழந்தைகளைத் தாக்குதல், பாலஸ்தீனியர்களை கொலை செய்வது போன்ற பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அடக்குமுறைகளை உலகிற்குத் தெரியப்படுத்தும் காணொளிகள் பல சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வருகிறது.

இது இஸ்ரேலின் செல்வாக்கை சர்வதேச அளவில் பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய மக்களிடையே இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான விமர்சனகள் எழுந்துள்ளன.

பொதுவாக தாங்கள் ஹோலோகாஸ்டிற்கு பலியானவர்கள் என்ற பிம்பத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பழக்கமுடைய இஸ்ரேல் தங்களின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிந்து விட்டால் ஹோலோகாஸ்டின் அனுதாப அலைகளைப் பெற முடியாது என்று அச்ச முற்றுள்ளது.

தற்பொழுதும் பாலஸ்தீனில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் தங்களை இஸ்ரேலிய ராணுவத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் பதிவு செய்யும் எந்த காணொளியும் இஸ்ரேலிய ராணுவத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களிடம் தரப்படும். இத்தகையை கெடுபிடிகளையும் மீறி வெளியுலகத்திற்கு வரும் காணொளிகளையும் கூகிள் மூலம் தடுக்க நினைக்கிறது இஸ்ரேல்.

கூகிள் இஸ்ரேலுடன் கை கோர்ப்பதைப் பல சர்வதேச பத்திரிக்கையாளர்கள் வெகுவாக கண்டித்துள்ளனர். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

இஸ்ரேல் தொடர்பான பதிவுகளை பேஸ்புக் தணிக்கை செய்கிறது என்ற செய்திக்கு பின்னர் கூகிளின் இந்த இஸ்ரேல் உடனான கூட்டு இணையதள சுதந்திரத்தையும் இந்த இணைய தளங்களின் நடுநிலையைக்கேள்விக்குறியாக்குகிறது.

கூகிளின் தேடுபொறிக்கு மாற்றாக www.duckduckgo.com போன்ற தேடுபொறிகள் இருக்கின்ற போதும் பெரும்பாலான மக்கள் கூகிளை தேர்ந்தெடுப்பது அதன் சுதந்திரத் தன்மையினால் தான்.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூகிளின் அப்போதைய சி.ஈ.ஓ வான எரிக் ஷ்மிடிட் கூகிள் பயனாளர்களின் அந்தரங்க தகவல் பற்றி கருத்து தெரிவிக்கும் போது If you have something that you don’t want anyone to know, maybe you shouldn’t be doing it in the first place. என்று கூறினார்.

கூகிளின் இந்த கொள்கைக்கு இஸ்ரேல் மட்டும் விதிவிலக்காவது எப்படி ?

இந்த தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றால் பத்திரிக்கை சுதந்திரத்தை விரும்பும் அனைவரின் எதிர்ப்பையும் கூகிள் சம்பாதிக்க நேரிடும். அதுவே இந்தத் தளங்களின் அழிவாகவும் மாறும்.
Source : Puthiya Vidial

1 comment:

  1. Will be the start of END to the YouTube and GOOGLE.

    It is Time for some other site to become dominated soon. People welcome the site stand for JUSTICE but not BIASED toward KILLERS and THIEVES

    ReplyDelete

Powered by Blogger.