Header Ads



உம்றா செல்பவர்கள் "இவர்களுக்காகவும்" துஆ கேளுங்கள் (உண்மைச் சம்பவம்)

அண்மையில் கொழும்பை சேர்ந்த காமினி என்ற நபர் 1 லட்சத்துக்கு கொழும்பில் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் 50 க்கு மேற்பட்டவர்களிடம் 70 லட்சம் கொள்ளையடித்திருந்தான். இது தொடர்பான செய்தி லங்கதீபவிலும் வந்திருந்தது.

இவன் கைது செய்யப்படும் போது இவனிடம் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட அரசின் உத்தியோகபூர்வ முத்திரைகள் (seal) இருந்தன.

இவற்றை வைத்து போலி ஆவணங்கள் தயாரித்து மக்களை நம்ப வைத்து பணம் கொள்ளையடித்துள்ளான். இவனின் தொழிலே இப்படி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தான்.

இவன் கைதாகி சில நாட்களில் பிணையில் வெளியே வந்தான். சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கு நன்கு புகுந்து விளையாடத் தெரிந்த ஒருவன் இவன். அநேகமாக மறுபடியும் அவனது கைவரிசையை காட்டுவான்.

உண்மையில் இவன் வலையில் எனக்கு தெரிந்த 9 பேர் சிக்கியிருந்தனர். அத்தனை பேரும் சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு கட்ட லோன் எடுக்க அங்கேயும் இங்கேயும் அமானாவிலும் லோ லோ என்று அழைந்து விரக்தியடைந்தவர்கள்.

இதில் சிலர் காமினிக்கு 1 லட்சம் கொடுக்க தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று பணம் கொடுத்தவர்கள். நகையை அடகு வைத்தால் வட்டியில் சம்பந்தப்படும்  என்பதாலேயே நகைகளை அடகு வைக்காமல் விற்பனை செயதனர்.

இப்படி சொந்த வீடு இல்லாமல் தவித்து இப்படியான வஞ்சகர்களின வலையில் சிக்கி ஏமாந்து போபவர்கள் ஒன்று இரண்டு பேரல்ல நாடு முழுதும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வீடு கொடுத்து உதவ முற்பட்ட ஒரு சகோதரன் சுமார் 48 லட்சம் கடனில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மக்களின் இக்கஷ்டத்தை தேவையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இப்படிபட்ட கயவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு தெரிந்த ஒரு சகோதரர்  சுமார் 2 லட்சம் கொடுத்து இவனிடம் ஏமாந்துள்ளார்.

ஒரு அமைச்சர் 500 பேரை இலவசமாக உம்ராக்கு அனுப்புவதாக கேள்விப்பட்டேன் மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்.  நல்ல விடயம். உம்ராவுக்கு செல்லும் 500 பேரிடமும் மற்றும் அமைச்சரிடம் சிறியதொரு வேண்டுகோள்

இப்படி வீடு இல்லாமல் ஒரு சிறு கடனுதவிக்கு கூட யாரும் இல்லாமல் அநாதவராக தவிக்கும் இப்படிபட்டவர்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்று
கஃபாவை கட்டியழுது துஆ கேட்கும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சட்டசிக்கல்கள் வராமல் இருக்க, பெயர்மாற்றப்பட்டுள்ளது, சில விடயங்கள் சொல்லப்படவில்லை. (உண்மை சம்பவம்)

No comments

Powered by Blogger.