பாலியல் பொம்மையை, சொர்க்கத்தில் இருந்து வந்த தேவதையாக வணங்கிய மக்கள்
இந்தோனேசியாவில் கடலில் மிதந்த ‘செக்ஸ்’ பொம்மையை தேவதை என கருதி மீனவர் எடுத்து வந்தார்.
இந்தோனேசியாவில் ஸ்லாவேசி மாகாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பாங்கை தீவுகளில் கடலில் மீன் பிடித்து கொண்டி ருந்தார். அப்போது கடலில் ஒரு அழகிய பெண் பொம்மை ஒன்று மிதந்து வந்தது.அது மீனவரின் படகு அருகே வந்து ஒதுங்கியது. அதை பார்த்த மீனவர் தனக்கு தேவதை கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார்.சொர்க்கத்திலிருந்து இறைவனால் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேவதையாக கிராம மக்கள் கருதினார்கள். பின்னர், அதை வீட்டுக்கு எடுத்து வந்து அதற்கு உடைகள் அணிவித்து அழகு படுத்தினார். பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்பொம்மை அழகிய பெண்ணாகவே காட்சியளித்தது. அதே நேரம் அந்த பொம்மை மனிதர்கள் போன்று சிரிப்பது அழுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே, இதை தேவதை என்று கிராம மக்கள் நம்பினர்.
எனவே, அந்த பொம் மையை சீராட்டி, பாராட்டி வந்தனர். இதற்கிடையே அதன் போட்டோக்களும், செயல்பாடுகளும் இணைய தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் மீனவரிடம் இருந்து அந்த பொம்மையை பறிமுதல் செய்தனர். மக்களின் வழிபாட்டிற்கு உரிய தேவதை அல்ல என்பதையும் அது ஒரு செக்ஸ் பொம்மை என்பதையும் அவர்கள் கண்டறிந்தார்கள்.சிலிகான் உலோகத்தில் உருவாக்கப்பட்டு மனித சதை போன்று கொழ கொழப்பாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
தேவையில்லாத நேரத்தில் காற்றைப் பிடுங்கி , சுருக்கவும் முடியும். கடலில் பயணித்த உல்லாச பயணிகள் படகு , அல்லது சரக்கு கப்பல் ஒன்றில் இருந்து யாரோ காற்றூதப்பட்ட நிலையில் இந்த பொம்மையை கடலில் எறிந்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
This How SATAN Plots and People fall into SHIRK
ReplyDelete