ஐக்கிய அமீரகம், செயற்கையான மலைகளை உருவாக்க திட்டம்
கடுமையான தண்ணீர் பற்றக்குறையை சமாளிக்க ஐக்கிய அமீரக அரசு செயற்கையான மலைகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றது.
கடந்த பல தசாப்தங்களாக ஐக்கிய அமீரக நாடுகளில் வெப்பத்தின் அளவு ராக்கட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதனால் நீராதாரங்கள் அனைத்தும் வரண்டும், விளை நிலங்கள் வதங்கியும், உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தும் காணப்படுகிறது.
இந்த நிலையை சமாளிக்கும் பொருட்டு ஐக்கிய அமீரகம் செயற்கையான பச்சை பசேல் மலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் மழை பற்றாக்குறை நெருக்கடியில் இருந்து சிறிதளவேனும் தப்பிக்க முடியும் என அந்த நாடுகள் கணக்கிட்டுள்ளன.
இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த சுற்றுப்புறச் சூழல் ஆய்வு பல்கலைக்கழக நிபுணர் குழுவினரை இந்த திட்டத்தை ஆய்வு செய்ய பணிந்துள்ளனர்.
பச்சை பசேல் மலைகளால் காற்று குளிர்ச்சியடைந்து மேகங்கள் உருவாக வாய்ப்பு உண்டு எனவும் இதனால் மழையின் அளவு அதிகரிக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் செயற்கை மலையை எந்த பகுதியில் உருவாக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு மட்டும் காலநிலையில் மறுதலை ஏற்படுத்தி மழையின் அளவை அதிகரிக்கும் நோக்கில் 3.7 கோடி ரூபாய் வரை ஐக்கிய அமீரகம் செலவு செய்துள்ளது.
Post a Comment