Header Ads



பிராந்திய ஊடகவிலாளரான நான், ஜனாதிபதியானமை குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும் - மைத்திரி


சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்குள் சிறந்த ஊடக கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக, பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் விரிவுரையாளர் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபொன்றும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

சுதந்திர ஊடகக் கொள்கைளை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. ஊடக சுதந்திரத்தை எமது அரசாங்கம் உறுதி செய்கின்றது. அதற்கான அனைத்து அர்ப்பணிப்புகளையும் எமது அரசாங்கம் செய்கின்றது. அதன் காரணமாக தகவல் அறியும் சட்டமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் நாம் முன்வைக்கவுள்ளோம். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பிராந்திய செய்தியாளராக 3 வருடங்களாக நானும் செயற்பட்டுள்ளேன். இந்நாட்டின் ஊடகவியலாளர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியானமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். 

ஊடக சுதந்திரம், ஊடகவியலாளரின் உரிமைகள், ஊடக நிறுவனங்களைப் பலப்படுத்துவது போன்ற விடயங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு, அரச கொள்கையின் ஊடாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். உலகை அரசியல்வாதிகள் அல்ல ஊடகவியலாளர்களே நிர்வகிக்கின்றார்கள் என்பது எமது கருத்தாகும். இந்த நாட்டின் சில ஊடக நிறுவனங்கள் செயற்படும் முறை தொடர்பில், ஏனைய ஊடக நிறுவனங்கள் எமக்கு முறைப்பாடு செய்கின்றன. 

சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களைப் போன்று, எந்தளவு பண்புடன் செயற்படுகின்றோம் என்பதை ஊடக நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். இணையத்தளங்கள் எந்தளவில் தமது சுதந்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றன என்ற விடயம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

2 comments:

  1. The government must take legal action against the wrong news institutions And ban them immediately

    ReplyDelete
  2. The government must take legal action against the wrong news institutions And ban them immediately. That is also an action for the media freedom

    ReplyDelete

Powered by Blogger.