பயன்படுத்திய ஆப்பிள், போன்களை விற்க தடை
ஒரு முறை உபயோகப்படுத்திய ஆப்பிள் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் விற்பதைப் போல ஒருமுறை பயன்படுத்திய செல்போனை மீண்டும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பதற்கான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு இருந்தது. இந்நிலையில், ஒரு முறை பயன்படுத்திய ஆப்பிள் செல்போனை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மின்னணு கழிவுகளை குறைக்கும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, தொலை தொடர்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை இது பாதிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
Post a Comment