சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால், பாராளுமன்றத்தை ஒத்திவைக்கிறேன் - சபாநாயகர்
இன்று -03- பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய நாளை வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனால் சபாநாயகரால் பாராளுமன்றத்தை 5 நிமிடம் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை நாளை வரை ஒத்திவைப்பதாகவும், இன்றைய சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

this is not an Parliament it is like a battle field for parties, when they will start to think about peoples well fares and country development?? we are poor peoples of Sri Lnaka
ReplyDelete