Header Ads



பாராளுமன்றத்தில் மஹிந்த அணி - ஆளும்தரப்பு அடிதடி, ஒரு எம்.பி.க்கு காயம்


நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த அடிதடியானது, ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், பாராளுமன்றை சபாநாயகர் சற்று நேரம் ஒத்திவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில்

பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கைகலப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற எதிரணியின் சில உறுப்பினர் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை நிலத்தில் தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. is it parliament or prison?

    ReplyDelete
  2. இவ்வாரான சினிமாவை மிஞ்சும் சண்டைக் காட்சிகளை ஏன் தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்குக் பார்த்துப் பரவசமடையும் வாய்ப்பை அளிக்கக் கூடாது ?

    ReplyDelete
  3. They just exchanged greetings to each other for May day!

    ReplyDelete
  4. கதவு இல்லாத கழிப்பறையும் , கழிப்பறை இல்லாத வீடும் போல இருக்கு !!!
    எதோ ஒரு இடத்திப் படித்த நியாபகம் , ஜப்பான் நாட்டின் நாடாளுமன்ற அமைச்சர்கள் எல்லோரும் பொறியியலால்களாம்.
    நம்ம நாட்டின் பாராளுமன்றத்தில் உள்ள ஒரு சிலர், பொறியில் மாட்டிய எலிகள்

    ReplyDelete

Powered by Blogger.